பக்கம்:ஓ மனிதா.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கழுதை கேட்கிறது

21

முடைய அரசியல்வாரிசாக நேருஜியைத் தேர்ந்தெடுத்த அவர், ஆன்மிக வாரிசாக வினுாபாஜியைத் தேர்ந்தெடுத்தார். அந்த வினோபாஜி, “கிழக்கு வங்கத்தில் பத்து லட்சம் பேர் மடிந்தால் மடியட்டும். எனக்கு எங்கே ‘ஏ ஒன்’ காப்பி? எனக்கு எங்கே ‘ஸ்பெஷல் கொத்தமல்லி கொத்சு?’ என்று கேட்கவில்லை; 'இந்தச் செய்தியைக் கேட்கும் போதே என் நெஞ்சு வலிக்கிறது; இதயம் துடிக்கிறது. இந்த நிலையில் உணவாவது, உறக்கமாவது? அருள் கூர்ந்து என்னை உண்ணாவிரதம் இருக்கவிடுங்கள்” என்று தம் சகாக்களை வேண்டிக்கொண்டு உண்ணாநோன்பு இருக்க ஆரம்பித்துவிட்டார்.

அந்த மாமனிதருக்கு, விபத்தில் சிக்குண்ட மனிதரின் வேதனையைத் தன்னுடைய வேதனையாக எண்ணிகை கொடுத்த பெண்ணுக்கு வேண்டுமானால் என்னைக் கழுதை! என்று இகழ, என்னே வைத்துக் கதைகட்ட, என்னைப் பார்த்துச் சிரிக்க அருகதை இருக்கலாம்; மற்றவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/22&oldid=1370273" இலிருந்து மீள்விக்கப்பட்டது