பக்கம்:ஓ மனிதா.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மயில் கேட்கிறது

23

வேறு எதை வெல்கிறீர்கள்? தலை முடியை வெல்கிறீர்கள; புருவத்தை வெல்கிறீர்கள்; கண்ணை வெல்கிறீர்கள்; கன்னத்தை வெல்கிறீர்கள்... உதட்டை வெல்கிறீர்கள் ....

அப்புறம்... அப்புறம்...

கண்ணராவி, கண்ணராவி! அதை வேறு நான் சொல்ல வேண்டுமா? எதையெல்லாமோ வென்று தொலைக்கிறீர்கள்!

பலன்? பன்னெடுங்காலமாகப் பின்னலிடப்பட்டுச் சாட்டை போல் தொங்கிக் கொண்டிருந்த தலை முடிவிதவிதமான கொண்டைகளுக்குள்ளே ஓடி ஒளிகிறது. இமைக்கு மேல் இயற்கையாக இருக்க வேண்டிய புருவம் மறைக்கப்பட்டு, நெற்றியின் மேல் செயற்கையாக எழுதப்பட்ட புருவம் ஏறி நிற்கிறது. கண்ணை கமை வலை வீசிக்காது இழுக்கிறது; கன்னமும் உதடும் வண்ணக் கலவை ஏந்திவந்து, ‘தொடாதே, தொட்டால் ஒட்டிக் கொள்வோம்’ என்று எச்சரிக்கின்றன.

தப்பித் தவறி இவற்றில் ஒன்றாவது இயற்கையாக இருக்க வேண்டுமே? ஊஹும்; எல்லாம் செயற்கை, செயற்கை...

இவற்றை விட்டுக் கொஞ்சம் கீழே வந்தால் முதலில் கண்ணில்படுவது எடுப்பான பிரேசரி; அதற்கு மேல் போட் நெக் பிளவுஸ். அந்தப் பிளவுஸுக்கு மேல் தெரியும் அழகான கழுத்தைப் பாழும் முந்தானை மறைத்துவிடக் கூடாதே என்பதற்காக கர்மசிரத்தையோடு அதை ஒரு பக்கமாக இழுத்துப் பிடித்துக் கொண்டு நடக்கும் பிடி நடை...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/24&oldid=1370278" இருந்து மீள்விக்கப்பட்டது