பக்கம்:ஓ மனிதா.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

ஓ, மனிதா!

இவை மட்டுமா சல்வார் கம்மீஸ், லுங்கி-சட்டை, பெல்பாட்டம், இத்தியாதி இத்தியாதி...

எல்லாம் எதற்காக?... ஆண்களைக் கவர்வதற்காகவா? ஐயே!


‘என்னைப் பார்த்திருக்கிறீர்களா? நீங்கள்? எந்த விதமான கவர்ச்சிக்கும் என்னை உள்ளாக்கிக் கொள்ளாமல் நான் பாட்டுக்கு கடந்து கொண்டிருப்பேன். என்னைக் கவர ஆண் மயில்களெல்லாம் என்னவெல்லாம் செய்யும் தெரியுமா?-தோகையை விரித்து ஆடு ஆடு என்று ஆடும்; ‘அக்கக்கக்’ என்று அகவிக் கொண்டே என்னைச் சுற்றி வரும்; எனக்குப் பிடித்த இரை ஏதாவது கண்ணில்பட்டால் தன் அலகால் கொத்திக் கொண்டு வந்து எனக்கு முன்னால் வைத்து விட்டு, ‘தயவு செய்து சாப்பிட வேணும்’ என்பது போல அடக்க ஒடுக்கமாக நிற்கும்.

இதற்கிடையில் வேறு எந்த ஆண் மயிலாவது தனக்குப் போட்டியாக வந்து விட்டால் அதையும் தன் சிறகால் அடியோ அடி என்று அடித்து விரட்டிக் கொண்டிருக்கும்'...

இப்படி ஒரு நாளா, இரண்டு நாளா? எத்தனையோ நாட்கள் அதுதவியாய்த் தவித்துக் கொண்டிருக்கும். என்னை அடைய வேண்டுமென்ற ஆசை அதற்கு இருக்கும்போது, எனக்கு மட்டும் அந்த ஆசை இல்லாமலா போகும்? இருக்கத்தான் இருக்கும். ஆனாலும் அதை நான் எந்த விதத்திலும் வெளியே காட்டிக் கொள்ளமாட்டேன்! அதற்காக என் அழகை எந்த விதத்திலும் கவர்ச்சியாக எடுத்துக்காட்ட மாட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/25&oldid=1370282" இலிருந்து மீள்விக்கப்பட்டது