பக்கம்:ஓ மனிதா.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மயில் கேட்கிறது

25

எதையும் மூடி வைத்தால்தானே மவுசு? திறந்துவிட்டால் மவுசு ஏது, மண்ணுங்கட்டி ஏது?

இது தெரியவில்லையே உங்களுக்கு!

என் கதை இப்படி என்றால் எங்கள் இனத்தைச் சேர்ந்த காடை, உள்ளான் போன்ற பறவைகளின் கதை எப்படி, தெரியுமா?—அவற்றில் பெண் பறவைகள் முட்டையிடுவதோடு சரி—அதற்குப் பின் ஆண் பறவைகள் தான் அடைகாத்துக் குஞ்சு பொறிக்க வேண்டும்!

தாம்பத்தியம் என்றால் சும்மாவா?

இதைப் புரிந்து கொள்ளாத நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ...

உங்களில் யாராவது ஒரு ஆண் மகன் தப்பித் தவறி அடுக்களைக்குப் போய் வெந்ததும் வேகாததுமாக ஒரு நாள் சமைத்து வைத்து விட்டால் போதும், அதைப் பெரிய ஜோக்காக எடுத்துக் கொண்டு விழுந்து விழுந்து சிரிக்கிறீர்கள்! அந்த மாதிரி நாங்கள் சிரிக்க மாட்டோம். அதையும் தாம்பத்தியக் கடமைகளில் ஒன்றாகக் கருதிச் ‘சமர்த்தாக’ இருந்து விடுவோம்!

அழகை வளர்க்க வேண்டியதுதான். எந்த அழகை வளர்ப்பது? அக அழகையல்லவா முதலில் வளர்க்க வேண்டும்? அதை விட்டுப் புற அழகை மட்டும் இப்படி வளர்த்துக் கொண்டே போனால் என்ன நடக்கும்?— விருப்பு வெறியாகி வெறி வெறுப்பாகி விடாதா?

ஓ.-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/26&oldid=1370288" இருந்து மீள்விக்கப்பட்டது