பக்கம்:ஓ மனிதா.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

ஓ மனிதா

போகட்டும்; இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன தெரியுமா?— உங்களுக்குத் ‘தன்னம்பிக்கை’ இல்லாமற் போனதுதான்.

அந்தத் தன்னம்பிக்கை உங்களுக்கு இல்லையென்றாலும் உங்கள் குழந்தைகளுக்காவது இருக்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களா? அதுவும் இல்லை.

நான் தான் சில சமயம் உங்கள் வீட்டுக் கூரையின் மேல் உட்கார்ந்து கொண்டு உங்களைக் கவனித்துக் கொண்டே இருக்கிறேனே!—நீங்கள் பல் தேய்ப்பதைப் பார்த்துவிட்டு உங்கள் குழந்தை தானும் பல் தேய்க்க எண்ணிப் பேஸ்ட்டையும் பிரஷ்ஷையும் கையில் எடுத்தால் போதும், ‘வேண்டாண்டா கண்ணு உனக்குத் தேய்க்கத் தெரியாது. இப்படிக் கொண்டா, நானே தேய்த்து விடுகிறேன்!’ என்று நீங்களே அதற்குப் பல் தேய்த்து விடுகிறீர்கள். குளிக்கப் போனால் உனக்குத் தெரியாதுடா, இப்படி வா!’ என்று நீங்களே அதைக் குளிப்பாட்டி விடுகிறீர்கள். சாப்பிடப் போனால், ‘உனக்குத் தெரியாதுடா, இப்படி வா!’ என்று நீங்களே அதற்கு ஊட்டி விடுகிறீர்கள். உடை அணிந்து கொள்ளப் போனால் ‘உனக்குத் தெரியாதுடா, இப்படி வா!’ என்று நீங்களே அதற்கு உடை அணிவித்து விடுகிறீர்கள்.

எல்லாம் முடிந்து பள்ளிக்கூடத்துக்கு போகும் போது அப்பா! பென்சில் வாங்க வேண்டும், காசு தா? என்று கேட்டாலோ, ‘உனக்கு என்ன தெரியும், பென்சில் வாங்க? வா, நானே வாங்கித் தருகிறேன்!’ என்று அவனைக் கையோடு கடைக்கு அழைத்துப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/31&oldid=1370727" இருந்து மீள்விக்கப்பட்டது