பக்கம்:ஓ மனிதா.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குரங்கு கேட்கிறது

31

போய்ப் பென்சில் வாங்கித் தந்துவிட்டு, ‘பார்த்துப் போ, பத்திரமா போ!, பார்த்துப் போ, பத்திரமா போ!’ என்று ஆயிரம் ‘பார்த்து’களும், ஆயிரம் ‘பத்திர’ங்களும் சொல்லி அனுப்பி விட்டு வருகிறீர்கள். முடிந்தால் பள்ளி வரை சென்று அவனை அங்கே உட்கார வைத்த பின்னரே நீங்கள் வேலைக்குச் செல்கிறீர்கள்.

அதாவது, எடுத்ததற்கெல்லாம் ‘உனக்கு ஒன்றும் தெரியாது, உனக்கு ஒன்றும் தெரியாது’ என்று சொல்லிச் சொல்லியே அவனை ஒன்றும் தெரியாதவனாக வளர்த்து, எதற்கும் தன்னை நம்பி வாழாமல் பிறரை நம்பி வாழக் கூடியவனாக அவனை உருவாக்கி விட்டு விடுகிறீர்கள்!

மனிதா! என்னையும் என் குட்டியையும் சேர்ந்தாற் போல் எங்கேயாவது பார்த்திருக்கிறாயா நீ— ‘ஐயோ, குழந்தைக்கு ஒன்றும் தெரியாதே! தவறிக் கீழே விழுந்து விடுமே!’ என்று நான் அதை வளைத்துப் பிடித்துக் கொண்டிருக்க மாட்டேன்; அதுதான் என்னை வளைத்துப் பிடித்துக் கொண்டிருக்கும். அதுவும் எப்படி? — என் முதுகைத் தன் கால்களால் சுற்றி வளைத்துப் பிடித்தபடி, அடி வயிற்றில் தலை கீழாகத் தொங்கிக்கொண்டிருக்கும். நானோ அதைக் குனிந்து கூடப் பார்க்காமல் கிளைக்கு கிளை, மரத்துக்கு மரம் இரைத் தேடித் தாவிக் கொண்டே இருப்பேன். அப்படித் தாவும்போது, ‘பத்திரம், கெட்டியாகப் பிடித்துக் கொள்.’ என்றோ, ‘விழுந்துவிடப் போகிறாய், ஜாக்கிரதை!’ என்றோ அதனிடம் சொல்லி, அதை எச்சரித்தாவது வைப்பேன் என்கிறீர்களா?—மாட்டேன். தன்னைத் தானே தான் அது காப்பாற்றிக்கொள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/32&oldid=1370735" இலிருந்து மீள்விக்கப்பட்டது