பக்கம்:ஓ மனிதா.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதிப்புரை

ஓ, மனிதா!—ஒரு முன்னோட்டம்.

‘நான் எழுதத் தொடங்குவதற்கு முதற் காரணம் அழுத்திக் கொல்கிற சாரமற்ற வாழ்க்கை என்னை நிர்ப்பந்திப்பது; இரண்டாவது காரணம் என்னுள் காட்சிக்கருத்து வடிவங்கள் நிறைந்திருப்பதால் என்னல் எழுதாமல் இருக்க முடியவில்லை’ என்கிறார் மார்க்சிம் கார்க்கி. இதே நிலைதான் நமது ‘விந்தன்’ எழுத்தாளன் ஆன கதையும்.

மெத்தப் படித்த மேதா விலாசத்தினாலோ, கற்பனை கரைபுரண்டு ஓடியதாலோ, தமக்கு எல்லாம் தெரியும் என்கிற ஞானப் பேரொளியினலோ, ‘தமிழ்’ பணம் புரட்டும், சுரண்டும் ஒரு கருவி என்பதாலோ, இல்லை பொழுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/4&oldid=1367774" இலிருந்து மீள்விக்கப்பட்டது