பக்கம்:ஓ மனிதா.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

ஓ, மனிதா!

நீங்கள் தான் சொல்லிக் கொள்கிறீர்கள், அதன் பலன்?—மதம் உங்களை மட்டும் பிடித்து ஆட்டினால் போதாதென்று என்னையும் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது.

ஆனால், இதில் ஒரு வேடிக்கை! இந்துக்களான உங்களில் சிலருக்கு நான் தெய்வம்; வேறு சிலருக்குத் தீனி.

இப்படியிருந்தும் என்னைக் காப்பாற்ற உங்களில் சிலர் ஓர் இயக்கமே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்; அதற்காகச் சத்தியாக்கிரகம்கூடச் செய்கிறார்கள். எங்கே?— அதுதான் ரசனைக்குரிய விஷயம்.

வெள்ளைக்காரன் ஆதிக்கத்திலிருந்து உப்பை மீட்க வேண்டுமென்று நினைத்தார் மகாத்மா. அதற்காக அவர் எங்கே சத்தியாக்கிரகம் செய்தார்?— கடற்கரையில்.

அந்நிய நாட்டுத் துணிகளின் பிடியிலிருந்து உள் நாட்டுத் துணிகளைக் காக்க வேண்டுமென்று நினைத்தார் காந்திஜி. அதற்காக அவர் எங்கே சத்தியாக்கிரகம் செய்தார்?— அந்நியத் துணிகள் விற்கும் கடைகளில்.

மதுவரக்கனிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டுமென்று நினைத்தார் மகாத்மா. அதற்காக அவர் எங்கே சத்தியாக்கிரகம் செய்தார்?— கள்ளுக் கடைகளில்.

என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பதாகச் சொல்லிக் கொள்ளும் நீங்கள் எங்கே சத்தியாக்கிரகம் செய்கிறீர்கள்?— மாட்டிக்கும் தொட்டியிலா?— இலலை; டெல்லி பார்லிமெண்ட் கட்டடத்தில்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/43&oldid=1370769" இலிருந்து மீள்விக்கப்பட்டது