பக்கம்:ஓ மனிதா.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாடு கேட்கிறது

45

கொண்டே அண்ணன் தான் கொண்டு வந்த பிஸ்கெட் பாக்கெட்டைத் தம்பியின் குழந்தையிடம் கொடுத்து விட்டுப் பின்னால் போவார். அந்த பிஸ்கெட், தான் வளர்க்கும் அல்சேஷியன் நாயின் உடம்புக்குக்கூட ஆகாது என்று தம்பி நினைப்பார்—அதையாவது, அவர் குழந்தை சாப்பிடுவதாவது?—வெடுக்கென்று பிடுங்கி எனக்காகப் புழக்கடையில் சேமித்து வைக்கும் கழுநீர்த் தொட்டியில் அண்ணனுக்குத் தெரியாமல் அதைப் போட்டு விடுவார்!

இந்த ‘அபூர்வ சகோதரர்’களின் தாயும் தந்தையும் தான் இப்போது என் ‘போஷகர்’கள். போஷகர்கள் என்றால் நான் கொடுக்கும் பாலுக்கும் இவர்களுக்கும் சம்பந்தமே கிடையாது. மாமனார் கிழவனுக்கு என்றாவது ஒரு நாள் உடம்பு சரியில்லாமல் போய், அதனால் சாப்பாடு பிடிக்காமல்போய், ‘கொஞ்சம் பாலாவது கொடுக்கிறாயா, குடித்துவிட்டுப் படுத்துக் கொள்ளச் சொல்கிறேன்’ என்று மாமியார் கிழவி மருமகளைக் கேட்டால், ‘வளரும் குழந்தைகளுக்கே பால் போதவில்லையாம்; வயசானவர்களுக்கெல்லாம் பால் கொடுக்க நான் எங்கே போவேன்?’ என்று அவள் தன் கழுத்தை ஒரு வெட்டு வெட்டி இழுப்பாள். கிழவி உடனே ‘டன்கர்க்’ ஆகிவிடுவாள். சாப்பாட்டு வேளையின்போது மட்டும் மோர் என்னும் பேரால் கொஞ்சம் நீர் வந்து இவர்களுடைய இலைகளில் விழும். அதை வாசனை பிடித்துக் கொண்டே இவர்கள் சாப்பிட்டு எழுந்து விடுவார்கள். என் பாலைப் பொறுத்த வரை என்னுடைய போஷகர்களுக்கு இருந்து வந்த சம்மந்தம் இதுவே.

என்னைக் கழுவிக் குளிப்பாட்டி விடுவதோடு, என் தொழுவத்தையும் கழுவிச் சுத்தப்படுத்துவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/46&oldid=1370777" இலிருந்து மீள்விக்கப்பட்டது