உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஓ மனிதா.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

ஓ, மனிதா!

கிழவியின் வேலை. எனக்குத் தீனி வைப்பது, தண்ணீர் காட்டுவது, பால் கறந்து கொடுப்பது கிழவனின் வேலை. இந்த வேலையைக்கூட மகனோ மருமகளோ பார்த்து இவர்களுக்குக் கொடுக்கவில்லை; தண்டச் சோறு’ என்ற அபவாதத்திலிருந்து தப்புவதற்காக இவர்களாகவே ஏற்றுக்கொண்ட வேலைதான் இது.

அப்படியும் சில சமயம் இவர்களுடைய மகன் சொல்வதுண்டு—“நான் ஒருவன் தான் உங்களுக்கு மகனா? உங்களுக்குச் சோறு போட வேண்டுமென்று என் தலையில் தான் எழுதி வைத்திருக்கிறதா? இன்னொருத்தன் இருக்கிறானே; அவன் வீட்டுக்குப் போக உங்களுக்கு என்ன கேடு?” என்று. அம்மாதிரி சமயங்களில் ‘ஒரு கேடுமில்லை’ என்று இவர்களும் அவர் வீட்டுக்குப் போய்ச் சில நாட்கள் தங்கிவிட்டு வருவதுண்டு.

சுருக்கமாகச் சொல்கிறேனே— அண்ணனுக்கும் தம்பிக்குமிடையே அகப்பட்ட கால் பந்தாக இவர்கள் இருந்து வந்தார்கள். எப்போது யார் எந்தப் பக்கம் உதைத்துத் தள்ளுகிறார்களோ, அந்தப் பக்கம் இவர்கள் போவதும் வருவதுமாக இருந்து வந்தார்கள்.

எங்கே இருந்தாலும் இவர்களுக்குக் கிடைக்கும் இடம் எனக்குக் கிடைக்கும் அதே இடம்தான். அதாவது வீட்டின் பின்புறம். இந்த விஷயத்தில் ஒன்றுபட்டிருந்த நாங்கள் இன்னொரு விஷயத்தில் மட்டும் ஏனோ ஒன்றுபட்டிருக்க வில்லை. அது என்ன விஷயம் என்கிறீர்களா?—சொல்கிறேன்.

னக்குப் பால் மறத்துப் போயிருந்த சமயம் அது. ஒரு நாள் யாரோ இருவருடன் ஐ. ஏ. எஸ் அதிகாரி என்னைத் தேடி வந்தார். தன்னுடன் வந்த-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/47&oldid=1370779" இலிருந்து மீள்விக்கப்பட்டது