பக்கம்:ஓ மனிதா.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாடு கேட்கிறது

47

வர்களிடம் என்னைக் காட்டி, ‘இதுதான் நான் சொன்ன மாடு, என்ன விலை கொடுப்பீர்கள்?’ சட்டென்று சொல்லுங்கள். எனக்கு ஆபீசுக்கு நேரமாகிறது என்றார்.

‘நாங்க எப்படிச் சொல்றதுங்க, நீங்களே சொல்லுங்க.’

‘நான் வாங்கும்போது இதை ஐந்நூறு ரூபாய்க்கு வாங்கினேன்...’

‘காரைக் கூடத்தான் வாங்கறப்போ பத்தாயிரம் இருபதாயிரம்னு வாங்கறீங்க; விற்கிறப்போ அதே விலைக்கா விற்கிறீங்க? ஆயிரம் இரண்டாயிரத்துக் கூடக் கொடுக்கலையா? அந்த மாதிரிதான் இதுவும். நாங்க அடிமாட்டுக்காரனுங்க, எங்களுக்கு அம்பது ரூவான்னாத்தான் கட்டும். அதுக்கு மேலே உங்க இஸ்டம்.’

கிழவன் சும்மா இருக்கக் கூடாதா? ‘ஐயையோ! இத்தனை நாளா நம்மைப் போஷித்து வந்த பசுவை இப்போ அடிமாட்டுக்காரனுக்கா கொடுக்கப் போறே? வேண்டாம்டா. பசு லட்சுமி மாதிரி, பேசாம ஏதாவது ஒரு கிராமத்துக்கு ஓட்டு, மாசம் ரெண்டு மூணு வாங்கிக்கிட்டு இதை மேய்க்க அங்கே எத்தனையோ பேரு இருக்காங்க. அவங்களே இதைச் சினைக்கும் விட்டு மாடும் கன்றுமா ஓட்டிவந்து இங்கே விட்டுடு வாங்க!’ என்றார்.

‘அது எனக்குத் தெரியும், நீ பேசாமல் இரு! என்ற அதிகாரி, எங்கே ஐம்பது ரூபாய் கொடுங்கள் இப்படி!’ என்றார்; அவர்கள் கொடுத்தார்கள். ‘ஓட்டிக்கொண்டு போங்கள்’ என்றார். அவர்கள் என்னை ஓட்டிக்கொண்டு சென்றார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/48&oldid=1370781" இலிருந்து மீள்விக்கப்பட்டது