பக்கம்:ஓ மனிதா.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

போக்குக்காகவோ விந்தன் தம் எழுதுகோலை எடுக்கவில்லை. இலக்கியம் படைத்து இறவாப் புகழ் எய்த வேண்டும் என்றும் நினைத்ததில்லை. பிறர் பாராட்ட வேண்டும், பரிசுகள் பல பெற வேண்டும் என்று படைப்பாற்றல் ‘பணி’யினைத் தொடங்கவில்லை.

மாறாக அன்பற்ற மனிதர்கள் ஒருவரை ஒருவர் பிழிந்தெடுக்கப்படுவதையும், சுரண்டப்படுவதையும் கண்ணாரக் கண்டார். உண்மையின் பேரால் உலகில் நூற்றுக்குத் தொண்ணுாற்றைந்து பேர் பொய் புனைசுருட்டில் தம் வாழ்வை நடத்தி நாகரிகமானவர்கள், உயர்ந்தவர்கள் ஆன்றவிந்தடங்கிய சான்றோர்கள் என்று போலிகளாக வாழ்வதை, சிலர் வாழ, பலர் வதைபடுவதை உணர்ந்தார். அந்த உணர்வின் விளைவே அவரின் அனைத்து எழுத்துகளும்.

எழுதத் தெரியும் என்பதனால் எழுத்தைத் தொழிலாக்கிக் கொண்ட வேட்கை அவரிடத்தில் எள்ளு மூக்கு அளவும் கிடையாது. வெறும் திறமையை நம்பியவர் அல்லர், அவர். தம் வாழ்வையும் தம் ஊர், நாடு, உலகின் வாழ்வையும் நன்கு புரிந்திருந்ததால் அவரால் எழுதாமல் இருக்க முடியவில்லை. உண்பதற்கு உழைப்பு எவ்வளவு தேவையோ அவ்வளவு தேவை வாழ்வுப் பசியுடையவர்களுக்காக விந்தனின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/5&oldid=1367777" இலிருந்து மீள்விக்கப்பட்டது