பக்கம்:ஓ மனிதா.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7. ஆந்தை கேட்கிறது

‘நம்மை என்ன கேட்கப் போகிறது, இந்த ஆந்தை’ என்று நீங்கள் எடுக்கும்போதே நினைத்து விழிக்காதீர்கள். விழித்து ‘என்னடா ஆந்தை மாதிரி விழிக்கிறாய்?’ என்று உங்களை உங்கள் நண்பர்கள் கேட்கவைத்து, என்னை வீணாகச் சந்தியில் இழுத்து வைக்காதீர்கள். ஏனெனில், உங்களில் சிலரைப் போல ‘நமக்குத் தெரியாதது இந்த உலகத்தில் ஒன்றுமேயில்லை’ என்று எண்ணி நான் தலையைக் கனக்க வைத்துக் கொள்வதுமில்லை; ‘ஒன்றுமே தெரியவில்லையே நமக்கும்’ என்று எண்ணித் தலையைக் கவிழ்த்துக் கொள்வதுமில்லை. இதனால் தெரிந்ததை நினைத்து நான் விறைப்பதும் கிடையாது; தெரியாததை நினைத்து விழிப்பதும் கிடையாது. எப்போதும் வழிமேல் விழிவைத்து எச்சரிக்கையுடன் இருப்பது என் சுபாவம்; அது உங்களுக்கு நான் விழிப்பதுபோல் படுகிறது. அவ்வளவே.

‘ஆந்தை விழிக்கக் கண்டேன்’ என்பதோடு நிற்கிறீர்களா நீங்கள்? இல்லை; இரவு நேரங்களில் நான் குரல் கொடுத்தால் போதும் ‘அபசகுணம், அபசகுணம்’ என்று அலறுவதில் என்னைக்கூடத் தூக்கியடித்து விடுகிறீர்கள். அந்த நேரம் பார்த்து யாராவது ஒருவர் உங்கள் வீட்டில் சாவோடு போராடிக் கொண்டிருந்தால் அவர் சாவது சர்வ நிச்சயம் என்று தீர்மானித்து, அவருடைய உயிர் பிரிவதற்கு முன்னால் உயில் எழுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/51&oldid=1370788" இலிருந்து மீள்விக்கப்பட்டது