பக்கம்:ஓ மனிதா.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆந்தை கேட்கிறது

51

வாங்கிக் கொண்டுவிட வேண்டுமென்று நீங்கள் அவசர அவசரமாக வக்கீலை அழைத்து வர ஓடுகிறீர்கள்.

இதைச் சொல்லும்போது சில நாட்களுக்கு முன்னால் நிகழ்ந்த சம்பவம் ஒன்று என் நினைவுக்கு வருகிறது. இப்படித்தான் ஒருவர் என் குரலைக் கேட் தும் ஒருநாள் இரவு வக்கீலை அழைத்துவர ஓடினார். ஆனால் நடந்தது என்ன தெரியுமா? வீட்டில் சாவோடு போராடிக் கொண்டிருந்தவர் பிழைத்து எழுந்துவிட்டார்; வக்கீலை அழைத்து வரப்போனவர் எதிர்பாராத விதமாகக் கார் விபத்தில் சிக்கிக் கண்ணை மூடிவிட்டார்!

இவரைப்போல் எத்தனை பேர் பிராணனை விட்டால் என்ன, நீங்கள் என்னவோ உங்கள் மூடநம்பிக்கைகளை இந்த யுகத்தில்விடப் போவதில்லை. விட்டால் எங்கே தன்னம்பிக்கை வந்துவிடுமோ என்ற பயம் போலும்.

வேடிக்கையானவர்கள் நீங்கள்!

ந்த வேடிக்கையில் ஒரு வேடிக்கை வென்றால் உங்களில் சிலர் எங்களில் சிலரைப் பிடித்து ஓரிடத்தில் அடைத்து வைத்து, அந்த இடத்துக்கு ‘மிருகக் காட்சிச்சாலை’ என்று பெயர் வைத்து, அதை எல்லாரும் வேடிக்கை பார்க்க வைப்பது.

உண்மையில் அங்கே நீங்களா எங்களை வேடிக்கை பார்க்கிறீர்கள்! இல்லை; நாங்கள் தான் உங்களை வேடிக்கை பார்க்கிறோம்.

இருக்காதா, ஒரு காலத்தில் எப்படி இருந்தவர்கள் நீங்கள்! அதை நினைத்தால் எங்களுக்கு வேடிக்கையாக மட்டுமல்ல, வேதனையாகவும் இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/52&oldid=1370790" இலிருந்து மீள்விக்கப்பட்டது