பக்கம்:ஓ மனிதா.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

ஓ, மனிதா!

உங்கள் நாட்டில் ‘உண்மை’ என்று ஒன்று இல்லையாம். பொய் பேசுபவர்களே இல்லாததால், ‘வலிமை’ என்று ஒன்று இல்லையாம், பகைவர்களே இல்லாததால் ‘ஈகை’ என்று ஒன்று இல்லையாம், ஏழை என்று யாருமே இல்லாததால். ‘அறிவுடைமை’ என்று ஒன்று இல்லையாம். எல்லாரும் கற்றறிந்தவர்களாயிருந்ததால்...

இப்படி நானா சொல்கிறேன். இல்லை; கம்பன் சொல்கிறான். அதையும் எப்படிச் சொல்கிறான்?

“வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
     திண்மை இல்லை, நேர்செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய்யுரை இலாமையால்

     வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்”

சரி, இவன் கவிஞன் தானே? இவன் சொல்வது ஒரு வேளை கற்பனையாகக்கூட இருக்கலாம். சீனயாத் திரிகனான யுவான் சுவாங் என்ன சொல்கிறான்?—அந்த நாளில் இங்கே வெளியே போகும்போது கூட யாரும் வீட்டைப் பூட்டிக்கொண்டு போகவில்லையாம், திருடர்களே இல்லாததால். தாகத்துக்குத் தண்ணீரைத் தேட வேண்டிய அவசியமே நேரவில்லையாம், பாலும் மோரும் வேண்டிய மட்டும் கிடைத்ததால். உணவுக்கோ, உறைவிடத்துக்கோ எங்கும் அலையவில்லையாம். எல்லா வீடுகளுமே விருந்தோம்பும் வீடுகளாயிருந்ததால்...

அப்போது இப்படியெல்லாம் இருந்த நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள்? ஊரிலிருந்து உடன் பிறந்த தம்பி வந்தாலும் உங்களில் பலர் அவனுக்கு வேண்டிய உணவுக்கும் உறைவிடத்துக்கும் ஓட்டலைக் காட்டி, ‘அதுதான் உனக்குச் சௌகரியமாயிருக்கும்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/53&oldid=1370791" இருந்து மீள்விக்கப்பட்டது