பக்கம்:ஓ மனிதா.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

ஓ, மனிதா!


லாமா? அவர்களுக்குரிய ‘மரியாதை’யே அந்த நாளில் அதில்தானே இருந்தது?

அந்தக் காலம் மாறி, ‘சரித்திரக் காலம்’ என்று ஒரு காலம் வந்தது அந்தக் காலமும் உங்களைப் பொறுத்தவரை ‘போதாத கால’மாகவே இருந்து வந்தது. உள்நாட்டு ராஜாக்களின் புண்ணியத்தால் பல வெளி நாட்டு ராஜாக்கள் இங்கே தாமாகவும் வந்தார்கள்; இறக்குமதியும் செய்யப்பட்டார்கள், அவர்களுக்கு நீங்கள் மட்டும் அடிமையாகவில்லை; உங்கள் ராஜாக்களும் அடிமையானார்கள்.

சுதந்திரம்?—அதைப் பற்றி உங்களில் யாருமே கவலைப்படவில்லை— எப்போது கவலைப்பட்டீர்கள், இப்போது கவலைப்பட?—ஏதோ, கிடைத்தவரை ஆதாயம்! அது தானே உங்கள் ‘பாலிஸி?’

நல்ல வேளையாக உங்கள் நாட்டின் வடபுலத்தில் சுதந்திர வேட்கை மிக்க லோகமானிய பால கங்காதர திலகர், கரம் சந்திரமோகனதாஸ் காந்தி போன்றவர்கள் தோன்றினார்கள்; தென்புலத்தில்வாஞ்சிநாதன், வ. உ. சிதம்பரம் போன்றவர்கள் தோன்றினார்கள். எல்லாருமாகச் சேர்ந்து உங்களிடையே சுதந்திரத் தீயை மூட்டினார்கள். ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது’ என்று பாடினார் இன்று உலகத்தோடு ஒட்டி வாழும் நாமக்கல் கவிஞர், அப்படியே வந்தது; தேசம் விடுதலை அடைந்தது.

எந்த நிலையில்?—அந்த நாள் ஐம்பத்தாறு ராஜாக்களுக்குப் பதிலாக இந்த நாள் ராஜாக்கள் இருநூற்றுச் சொச்சம் பேரைக் கொண்ட நிலையில்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/59&oldid=1370819" இலிருந்து மீள்விக்கப்பட்டது