பக்கம்:ஓ மனிதா.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

எழுத்தும் தேவைப்பட்டது. அதுவே அவர் படைப்பு.

“விந்தன்” தம்மை ஒத்த மக்களுக்காகவும் தாம் வாழ்ந்த வருங்காலத்திற்காகவும், தமது கடமை என்ன என்பதைச் சமுதாயப் பொறுப்புடனும் எழுதினார். தனது கடமையையும் மனச்சான்றையும் அன்புக்கும், உண்மைக்கும் உடமையாக்கினார்.

வாழ்க்கையின் ஒளி மிகுந்த மகிழ்ச்சியான கூறுகளைத் தெரிந்து கொண்டிருப்பது போலவே அதன் துாசும் மாசும் படிந்த இருளடர்ந்த கூறுகளையும் தெரிந்து வைத்திருந்தார். அவருடைய பட்டறிவும், நுகர்வறிவும் ஆழ்ந்து பரந்து உயர்ந்திருந்தன. அதனால் அவரின் எழுத்து வடிவம் ஓங்கி விரிந்த பார்வையுடன் இருந்தது.

மக்களிடையில் உயர்ந்த உணர்ச்சிகளை வளர்ப்பது, அநீதியை வெறுக்கும் உணர்வை ஊட்டுவது, மனிதாபிமானத்தை உயர்த்துவது, மனிதனை மனிதனாக வாழத்துரண்டுவது போன்றவையே விந்தன் எழுத்தின் உந்தாற்றல்கள்.

எல்லோருடைய அறியாமைக்கும் அங்குசம் நகைச்சுவையே என்று தெரிந்து புரிந்து கையாண்டு, வெற்றியும் பெற்றவர் விந்தன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/6&oldid=1367781" இருந்து மீள்விக்கப்பட்டது