பக்கம்:ஓ மனிதா.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

ஓ, மனிதா!


என்கிறோம்! ‘சண்டைக்கு வேண்டுமானாலும் எல்லாரும் சேர்ந்தாற்போல் போவோம்; சாப்பாட்டுக்கு மட்டும் நீ வேறே, நான் வேறே; அவன் வேறே, இவன் வேறே தான்’ என்று ‘நாங்கள் இப்போது பிரிவினையைப் பற்றிப் பேசவில்லை, நாங்கள் இப்போது பிரிவினையைப் பற்றிப் பேசவில்லை’ என்று சொல்லிக்கொண்டே பிரித்துப் பிரித்துப் பேசிக்கொண்டிருக்கிறாயே? என்றால், ‘சமாதானத்துக்கு அதுதான் வழி!’ என்கிறாய்!

வேடிக்கையாக இல்லை?

இந்த மாதிரி வேடிக்கை எதற்கும் இடம் கொடாமல் நாங்கள் தொன்று தொட்டு எங்களுக்குள் ஒருமைப் பாட்டைக் காத்துவருகிறோம் என்பது உனக்குத் தெரியும், நாட்டுக்கு நாடு நாங்கள் காலநிலை காரணமாக நிறத்தால் வேறுபட்டிருந்தாலும், குரலால் வேறுபட்டிருந்தாலும், மேயும்போது நாங்கள் ஒரு மந்தையாகவே மேய்கிறோம் என்பதும், இரவில் எங்கேயாவது தங்கும் போதும் ஒரு மந்தையாகவே தங்குகிறோம் என்பதும் உனக்குத் தெரியும். தெரிந்தும் நீ எங்களைப் பற்றி என்ன சொல்கிறாய்? எங்களுக்குச் சுயபுத்தி இல்லையென்றும், அதனால் தான் ஒன்றன் பின் ஒன்றாகக் கண்ணை மூடிக்கொண்டு போகிறோ மென்றும் எங்களை இழித்தும் பழித்தும் சொல்கிறாய்!

உண்மைதான்; உங்களுக்குள்ள ‘சுயபுத்தி’ எங்களுக்கு இல்லை என்பது என்னவோ உண்மை தான். இருந்தால்தான் நாங்களும் உங்களைப்போல் வருடந்தோறும் ஒருமைப்பாட்டுப் ‘பிரதிக்கினை’ என்று ஒன்றை எடுத்துக் கொண்டு, நிமிடந்தோறும் பிரிவினையைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்போமே!

வெட்கமாயில்லை உங்களுக்கு?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/63&oldid=1370852" இருந்து மீள்விக்கப்பட்டது