பக்கம்:ஓ மனிதா.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிட்டுக்குருவி கேட்கிறது

65

தேவைப்படவில்லை. படை தேவைப்படவில்லை; படைக்கலன்களும் தேவைப்படவில்லை.

பின்னாலோ?—அவை எல்லாமே உனக்குத் தேவைப் பட்டன. முதலில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்த உங்களிடையே மூண்ட உரிமைப் போர், ஒரு கூட்டத்துக்கும் இன்னொரு கூட்டத்துக்கும் இடையே மூண்ட போராயிருந்தது. நாளடைவில் அதுவே ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் மூண்ட போராயிற்று.

போர், போர்! ஓய்வில்லாத போர்; ஒழிவில்லாத போர்!

ஓர் உரிமைக்கா? - இல்லை; ஓராயிரம் உரிமைகளுக்காகப் போர்!

ஏன், ஒரு காலத்தில் வரைமுறையற்ற காட்டு மிராண்டிகளாய் வாழ்ந்து கொண்டிருந்த நீங்கள் உங்களுடைய நாகரிகத்தையே போரைக் கொண்டு தான் அன்றும் வளர்த்தீர்கள்; இன்றும் வளர்க்கிறீர்கள்.

ஆனால் அன்று இருந்த ராஜாக்கள் இன்று இல்லை; தப்பித்தவறி ஓரிருவர் இருந்தாலும் அவர்கள் வெறும் ‘பொம்மை ராஜாக்க’ளாக இருந்து வருகிறார்கள். இவர்களுக்குப் பதிலாக ‘மக்கள் பிரதிநிதிகள் என்று’ சொல்லிக் கொள்வோர், எல்லாம் ‘மக்களுக்காக’ என்று சொல்லிக் கொண்டு எல்லாவற்றையும் ‘தங்களுக்காக’வே செய்து கொண்டிருக்கிறார்கள். தெருவோரத்தில் துண்டு விரித்து மூன்று சீட்டு ஆடுவோர், ‘வா ராஜா; வா; பத்து பைசா வைச்சா இருபது பைசா தரேன். ஒரு ரூபா வைச்சா இரண்டு ரூபா தரேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/66&oldid=1370864" இருந்து மீள்விக்கப்பட்டது