பக்கம்:ஓ மனிதா.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

ஓ, மனிதா!

பத்து ரூபா வைச்சா இருபது ரூபா தரேன்; வா ராஜா, வா!’ என்று வருவோர் போவோரை யெல்லாம் கூவி அழைத்துக் கூட்டம் சேர்த்து, ‘இதோ பார், கிங்! இதோ பார் க்வின்! 'இதோ பார் ஜோக்கர்!’ என்று ‘ஜோக்’ காட்டுவது போல, ‘இதோ பார், ஜனநாயகம் இதோ பார், சோஷலிஸம்! இதோ பார், ஜனநாயக சோஷலிஸம்!’ என்று அவர்கள் ஒரு கண்ணை உங்கள் மேலும் இன்னொரு கண்ணை உங்கள் வோட்டின் மேலும் வைத்து மாற்றி மாற்றிக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

போலீஸ் ஸ்டேஷன், நீதி மன்றம், சிறைச்சாலை, தூக்கு மேடை, ராணுவம்—இவையெல்லாம் மக்களின் பாதுகாப்புக்காக இருக்கின்றனவா? மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்புக்காக இருக்கின்றனவா?

யோசிக்க வேண்டிய விஷயம்.

இந்த நிலைமையில் நீங்களும் உங்கள் சொத்துரிமையை விட யோசிக்கிறீர்கள்; சொத்துரிமையும் உங்களை விட யோசிக்கிறது! இதனால் ஏற்பட்ட சொந்தமும் பந்தமும் வேறு சிலந்தி வலை பின்னுவது போல் பின்னி உங்களைத் தங்களிடையே சிக்க வைத்துக் கொண்டு விட்டன. அப்புறம் கேட்க வேண்டுமா?— நல உரிமை, நாட்டுரிமை என்று உங்களிடையே எடுத்ததற்கெல்லாம் போர்! எப்போது பார்த்தாலும் போர்!

போர் வரும் போதெல்லாம் சும்மாவா வருகிறது?—புதுப்புது ஆயுதங்களையும், புதுப்புது நாகரிகங்களையும் கொண்டு வருகிறது.

அது கடைசியாகக் கொண்டு வந்துள்ள ஆயுதம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ராக்கெட்; நாகரிகமோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/67&oldid=1370872" இலிருந்து மீள்விக்கப்பட்டது