பக்கம்:ஓ மனிதா.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

விலங்குகளையும், பறவைகளையும் வைத்துக் கதையில் நீதி புகுத்துவது பஞ்ச தந்திரக் கதைகளிலும், கீதோபதேசக் கதைகளிலும், ஈசாப்புக் கதைகளிலும் உண்டு. ஆனால் அந்த நீதிக் கதைகளில் காணாத குத்தல், கிண்டல் ஆகியவை நீறு பூத்த நெருப்பாக இல்லாமல் வீறுகொண்டெழுந்த அக்கினிப் பிழம்பாக விளங்குவதே ‘ஓ, மனிதா!’ கட்டுரைக் கதைகள். இல்லை; அவை கதைக் கட்டுரைகள்.

மனிதப் பண்பின் உயிரோட்டமே இந்தப் பதினேழு கனலோவியங்கள், சமூக வாழ்வின் குற்றம் குறைகளையும், சூன்யம் தொல்லைகளையும் வண்ணங்களாகக் கொண்டு பிறர் தொட முடியாத வாழ்வுச் சித்திரத்தைத் தீட்டியுள்ளார். இதன் கண் பரந்த பட்டறிவின் கரு உள்ளது. பயின்ற ஓவியரின் நுண்ணிய தெளிவும் விரிந்த அறிவும் உள்ளன. எண்ணத்தின் வண்ணப் பார்வை உள்ளது. இலட்சியத்தின் உண்மை நோக்கு உள்ளது. அனைத்தினும் மேலாக அன்பு வாழ்வின் கலைநயம் தலைதூக்கி நிற்கிறது.

தம்முடைய எழுத்துக்களில் சுறுசுறுப்பையும் உயிர்த்துடிப்பையும் காட்டுகின்ற தமிழ் எழுத்தாளர்கள் ஒரு சிலரே. எல்லாம் நன்மைக்கே என்கிற கோட்பாட்டில் உண்மையும் நன்மையும் இல்லையென்று தெரிந்தவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/7&oldid=1367784" இலிருந்து மீள்விக்கப்பட்டது