பக்கம்:ஓ மனிதா.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிட்டுக்குருவி கேட்கிறது

69

ஒருநாளும் முடியாது.

அப்படியானால் நிம்மதிக்கு வழி?—கபீர்தாசர் சொல்லும் கதையைக் கேள்.

ஒன்றன் பின் ஒன்றாக எறும்புகள் சென்று கொண்டிருந்தன. முன்னால் சென்ற எறும்பின் வாயில் ஒரு குறு நொய் இருந்தது. வழியில் இன்னொரு குறு நொய்யைக் கண்டது அது. உடனே அதையும் எடுக்க அந்த எறும்பு முயன்றது— எப்படி முடியும்? அதன் வாயில் தான் ஏற்கெனவே ஒரு குறு நொய் இருக்கிறதே? —தவியாய்த் தவித்தது!

பின்னால் வந்து கொண்டிருந்த எறும்பு சொலலிற்று; ‘ஒன்றை விடு, இன்னொன்றை எடு.’

ஆம்; ஒன்றை விடாமல் இன்னொன்றை எடுப்பது எப்படி?

‘சொத்துரிமை’ வேண்டுமானால் ‘நிம்மதி’யை விடு; ‘நிம்மதி’ வேண்டுமானால் ‘சொத்துரிமை’யை விடு.

இல்லாவிட்டால் என்னைப் போல் ஒரு நாளும் உன்னால் நிம்மதியாக வாழ முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/70&oldid=1370892" இலிருந்து மீள்விக்கப்பட்டது