பக்கம்:ஓ மனிதா.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10. பைரவர் கேட்கிறார்

யார் இந்த பைரவர்?’ என்று விழிக்காதீர்கள்; அதுவும் ஏதோ ஒரு புராணக் கதையை ஒட்டி நீங்கள் கொடுத்த பெயர்தான் எனக்கு ‘நாய்’ என்று சொல்லிக் கொள்வதை விட ‘பைரவர்’ என்று சொல்லிக் கொள்வது கொஞ்சம் கெளரவமாயிருக்கிறதே என்பதற்காக அப்படி சொல்லியிருக்கிறேன்!

ஆமாம், ‘கெளரவம் நடத்தையில் இல்லாவிட்டாலும் பெயரிலாவது இருக்கட்டும்’ என்ற புத்திசாலித்தனம் எனக்கு எங்கிருந்து வந்திருக்கும்?...

வேறு எங்கே இருந்து வந்திருக்கப் போகிறது? எல்லாம் உங்களிடமிருந்து தான் வந்திருக்கும். சகவாச தோஷம் விடுமா?

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் வெள்ளைக்காரன் காலத்தில் உங்கள் பெயருக்கு முன்னால் வந்து சேர்ந்த ராவ்பகதூர், திவான்பகதூர் போன்ற பட்டங்கள் உங்களுடைய கெளரவத்தை எத்தனை வகைகளில் உயர்த்தியிருக்கின்றன!

அவற்றின் அடிச்சுவட்டைப் பின்பற்றி இன்று உங்கள் பெயருக்கு முன்னால் வந்து சேரும் பத்மபூஷண், பத்மஸ்ரீ போன்ற பட்டங்கள் உங்களுடைய நடத்தைக்கு எத்தனை வகைகளில் சப்பைக்கட்டுக்கள் கட்டிக் கொண்டிருக்கின்றன!

அந்த வகையில் பார்த்தால் ‘நாய்’ என்று சொல்லும்போது அடியேனும் அதலபாதாளத்துக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/71&oldid=1369717" இருந்து மீள்விக்கப்பட்டது