பக்கம்:ஓ மனிதா.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பைரவர் கேட்கிறார்

71

தாழ்ந்து விடுகிறேன்; ‘பைரவர்’ என்று சொல்லும் போது வான முகட்டுக்கு உயர்ந்து விடுகிறேன் போலிருக்கிறதே!

பெயரளவில் உங்கள் கெளரவத்தை மட்டுமா நீங்கள் உயர்த்திக் கொள்கிறீர்கள்? பெரிய ‘சீர்திருத்தவாதி’ என்ற பெருமையையும் புகழையும்கூட அடைந்து விடுகிறீர்கள்.

நேற்று வரை பழமைவாதியாயிருந்த கணேசய்யர் ‘அய்யர்’ என்ற வாலை நீக்கிக் ‘கணேசன்’ என்று சொல்லிக்கொண்ட மாத்திரத்தில் ‘புதுமைவாதி’யாகிவிடுகிறார்; நேற்று வரை பத்தாம் பசலியாயிருந்த ராமசாமி அய்யங்கார், ‘அய்யங்கார்’ என்ற வாலை நீக்கி ‘ராமசாமி’ என்று சொல்லிக் கொண்ட மாத்திரத்தில் ‘இருபதாம் நூற்றாண்டு பேர்வழி’யாகி விடுகிறார்; நேற்று வரை சுத்த கர்நாடகமாயிருந்த சுப்பராய முதலியார், ‘முதலியார்’ என்ற வாலை நீக்கிச் ‘சுப்பராயன்’ என்று சொல்லிக் கொண்ட மாத்திரத்தில் ‘புரட்சிக் கன’லாகி விடுகிறார்; நேற்று வரை பழைய பஞ்சாங்கமாயிருந்த பராங்குசம் பிள்ளை, ‘பிள்ளை’ என்ற வாலை நீக்கிப் பராங்குசம் என்று சொல்லிக் கொண்ட மாத்திரத்தில் ‘பகுத்தறிவுச் சிங்க’மாகிவிடுகிறார்!

இந்தப் ‘பகுத்தறிவுச் சிங்கம்’ ஞாயிற்றுக்கிழமை ஏதாவது ஒரு நல்ல காரியத்தைச் செய்வதாயிருந்தால் அதை மாலை நாலரை மணிக்குள்ளேயோ அல்லது ஆறு மணிக்கு மேலேயோ செய்யும். இடையே வரும் ‘ராகு கால’த்தை மட்டும் இது பெயரிட்டுச் சொல்லாது; சொல்லாமலே விலக்கிச் ‘சீர்திருத்தம்’ செய்துவிடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/72&oldid=1369723" இருந்து மீள்விக்கப்பட்டது