பக்கம்:ஓ மனிதா.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பைரவர் கேட்கிறார்

75

திருந்தாலும் இனத்தால், மொழியால், குணத்தால் ஒன்றுபட்டிருக்கிறோம். நீங்களோ? இனத்தைத் தவிர வேறு எதிலும் ஒன்றுபட்டிருப்பதாகத் தெரியவில்லை !

எங்கள் மொழி ஒன்றே— அதாவது, லொள் லொள்.

எங்கள் குணம் ஒன்றே— இதோ சான்றுகள்.

‘வாழில் நாற்பது கோடியும் வாழ்வோம், வீழில் நாற்பது கோடியும் வீழ்வோம்’ என்று பழைய கணக்கை வைத்து இன்றும் ஊர் மெச்சப் பாடிவிட்டு, சாப்பாட்டு வேளையின் போது மட்டும் யாராவது வந்துவிட்டால் உங்களைப் போல் நாங்கள் முகத்தைச் சுளிப்பதில்லை; இவன் ஏன் இப்போது வந்து தொலைந்தான்?’ என்று உள்ளூறக் குமைந்துகொண்டே, ‘வாங்க வாங்க’ எங்கே ரொம்ப நாளா உங்களைக் காணோம்?’ என்று உதட்டளவில் உபசாரம் செய்வதில்லை. எங்கள் இயற்கையான குணத்தை எதற்காகவும் மாற்றிக்கொள்ளாமல், ஒரு தெரு நாய் இன்னொரு தெருவுக்குத் தப்பித் தவறி வந்துவிட்டால், பொய்யான உபசாரம் எதுவும் செய்யாமலே அதை நாங்கள் விரட்டியடிக்கிறோம். எந்த வீட்டிலிருந்தாவது ஓர் எச்சிலை வந்து வெளியே விழுந்தால், அதை அடைவதில் மறைமுகமான போராட்டம் எதுவும் எங்களிடையே இருக்காது; எல்லாம் பகிரங்கமான போராட்டமாகவே இருக்கும். அதில் எது வெற்றி பெறுகிறதோ, அதற்குத்தான் அந்த இலைகிடைக்கும். இதுவே எங்கள் நாகரிகம்; இதுவே எங்கள் பண்பு. இவற்றுக்காக நாங்கள் எதையும் ஒளிப்பதுமில்லை! மறைப்பதுமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/76&oldid=1369736" இருந்து மீள்விக்கப்பட்டது