உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஓ மனிதா.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பைரவர் கேட்கிறார்

77

வேடிக்கையாக இல்லை? - வாழ்க்கையில் ‘ரியலிஸம்’ இருந்தாலல்லவா கதை-கட்டுரைகளில் ‘ரியலிஸம்’ இருக்கும்?

எனக்கும் உனக்கும் எத்தனையோ விஷயங்களில் வித்தியாசம் இருந்தாலும் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் ‘படு ஒற்றுமை’ உண்டு என்பதை நான் இங்கே கொஞ்சம் வெட்கத்துடனாவது ஒப்புக்கொண்டுதான் தீர வேண்டும். உன் எஜமானனையோ, அதிகாரியையோ கவருவதற்காக நீ என்ன செய்கிறாய்?-- தலையை ஆட்டுகிறாய்; என் எஜமானனைக் கவருவதற்காக நான் என்ன செய்கிறேன். - வாலை ஆட்டுகிறேன்.

எதுவரை...

எஜமானனிடமிருந்து ஏதாவது கிடைக்கும் வரை உன் தலை ஆடுகிறது; அதே மாதிரி என் வாலும் ஆடுகிறது.

கிடைத்த பின்?...

நீயும் தலையை ஆட்டுவதை நிறுத்திக் கொண்டு விடுகிறாய்; நானும் வாலை ஆட்டுவதை நிறுத்திக் கொண்டு விடுகிறேன்.

இதைத்தான் சிலர் ‘விசுவாசம்’ என்றும், ‘நன்றி’ என்றும் சொல்லுகிறார்கள் சொல்வோர்கள் சொல்லிக் கொண்டு போகட்டுமே, நமக்குத் தெரியாதா, அது ‘வடி கட்டின சுயநலம்’ என்று?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/78&oldid=1369748" இலிருந்து மீள்விக்கப்பட்டது