பக்கம்:ஓ மனிதா.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11. கோழி கேட்கிறது

‘கொக்கரக்கோ’ என்றதும் நான் சேவற் கோழி என்பதை நீங்கள் தெரிந்துகொண்டிருப்பீர்கள். அன்று மட்டுமல்ல, இன்றும் கடிகாரம் வாங்கி வைத்துக் கொள்ள வசதியில்லாதவர்களையெல்லாம் நான் தானே குப்பை மேட்டின் மேல் ஏறி நின்றும், கூரை வீட்டின் மேல் ஏறி நின்றும் குரல் கொடுத்து எழுப்பி வருகிறேன்?

மனிதர்களான நீங்கள் உங்களைப் பொறுத்தவரை ஒரு விஷயத்தில் நீண்ட நாட்களாகவே தவறான அபிப்பிராயம் கொண்டிருக்கிறீர்கள்—அதாவது, உங்களில் சிலருக்குத் திடீரென்று பைத்தியம் பிடிக்கிறதல்லவா? அவர்கள் மட்டுமே ‘வேடிக்கைக்குரியவர்கள்’ என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். உண்மை அதுவல்ல; பைத்தியம் பிடிக்காவிட்டாலும் நீங்கள் அனைவருமே வேடிக்கைக்குரியவர்கள்தான்!

நீங்களே சொல்லுங்கள், பொழுதுபோக்குக்கு இந்த உலகத்தில் என்னதான் இல்லை?—நீலவான் இருக்கிறது; அதில் நீங்கள் நினைத்தபடியெல்லாம் கோலமிட்டுக் காட்ட மேகக் கூட்டங்கள் இருக்கின்றன. பெருங்கடல் இருக்கிறது; அதில் உங்களிடமிருந்து ஊதியம் எதையும் எதிர்பார்க்காமலே உங்களுக்காகப் ‘பங்க்கா’ இழுத்து, உங்கள் மேல் ஜிலுஜிலு–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/79&oldid=1370903" இருந்து மீள்விக்கப்பட்டது