பக்கம்:ஓ மனிதா.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

ஒ, மனிதா!

‘நாங்கள் வாழாவிட்டாலும் பரவாயில்லை, மனிதன் மனிதனாக வாழ்ந்தால் போதும்’ என்பதற்காகப் புத்தர் ராஜபோகத்தைத் துறந்தார்; கொடுங்கோலர்கள் தமக்குச் சூட்டிய முள் கிரீடத்தை இயேசு பிரான் மலர்க்கிரீடமாக ஏற்றார், நபிகள் நாயகம் கல்லடிபட்டார்; காந்திஜி துப்பாக்கிக் குண்டுக்கு இரையானார்.

பலன்? உங்களிடையே காந்தியும் பிறக்கவில்லை; சமாதானமும் நிலவவில்லை.

எப்படி நிலவும்?—உங்களுக்குத்தான் பொழுதைப் போக்கக்கூட இன்னும் ஏதாவது ஒரு சண்டை வேண்டியிருக்கிறதே!

அதற்காக நீங்கள் முதலில் பயன் படுத்தியது சின்னஞ்சிறு காடை—ஒரு பாவமும் அறியாத அவற்றில் இரண்டை ஒன்றோடொன்று மோத விட்டு நீங்கள் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்தீர்கள். அவையிரண்டும் மூர்க்கத்தனமாக ஒன்றையொன்று மூக்கால் குத்திக் கொள்வதையும், கால்களால் உதைத்துக் கொள்வதையும், சிறகால் அடித்துக்கொள்வதையும் பார்த்துப் பரவசமடைந்தீர்கள். கடைசியாக அந்தச் சண்டையில் ஒன்றினிடம் ஒன்று தோற்று ஓடுவதைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தீர்கள்.

அடுத்தாற்போல் நீங்கள் அதே நோக்கத்துக்காகத் தேர்ந்தெடுத்தது காடையை விடக் கொஞ்சம் பெரிதான கவுதாரி. உங்களுக்குப் பொழுது போகாத போதெல்லாம் அவற்றில் இரண்டைப் பிடித்துச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/81&oldid=1370915" இலிருந்து மீள்விக்கப்பட்டது