பக்கம்:ஓ மனிதா.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நரி கேட்கிறது

87

வைக்காதேடின்னு எத்தனை தடவை சொல்கிறது? கேட்கிறாளா?’ என்று உச்சஸ்தாயியில் கத்திக் கொண்டே புடவையை அவிழ்த்துக் கொண்டு உள்ளே போவார். தெருவே வருவோர் போவோர் அவரை வேடிக்கை பார்த்துக் கொண்டே வருவார்கள், போவார்கள். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு எஜமானி வெளியே வருவாள். சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ‘இங்கே கட்டி இருந்த பட்டுப் புடவையை எங்கே காணோம்?’ என்று அக்கம் பக்கத்திலுள்ளவர்களை விசாரிப்பாள். ‘கொஞ்ச நேரத்திற்கு முன்னாலே உங்க வீட்டுக்காரர் வந்து உங்களைத் திட்டிக் கொண்டே புட்வை அவிழ்த்துக் கொண்டு போனார் போலிருக்கிறதே’ என்பார்கள் அவர்கள். அப்போதுதான் புடவையைப் பறிகொடுத்தவளுக்குத் தெரியும்—வந்தவர் தன் வீட்டுக்காரர் இல்லை, திருடன் என்று.

அப்பாவிக் கேஷியர் ஒருவர் பேங்க்குக்கு வருவார். செக்கைக் கவுண்டரிலே கொடுத்துப் பணம் வாங்கி, அங்கேயே ஒரு மூலையில் நின்று எண்ணிக்கொண்டு இருப்பார். அந்த இடத்துக்கு ஒருவர் வருவார். நாலைந்து நோட்டுக்களைக் கீழே போட்டு விட்டு ‘அடாடா! நோட்டெல்லாம் கீழேவிழுந்துகிடக்கு, அதைக் கவனிக்காமல் நீங்கள் பாட்டுக்கு எண்ணிக் கொண்டிருக்கிறீர்களே?’ என்பார், கேஷியர் அவற்றைப் பொறுக்கியெடுக்கக் கீழே குனிய வேண்டியதுதான் தாமதம். வந்தவர் மேலே உள்ள நோட்டுகளை யெல்லாம் ‘அபேஸ்’ செய்து கொண்டு வெளியே போய்விடுவார்.

‘திருடர்கள்’ கைவரிசை இப்படி; அயோக்கியர்கள் கைவரிசை எப்படி?...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/88&oldid=1371017" இருந்து மீள்விக்கப்பட்டது