பக்கம்:ஓ மனிதா.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நரி கேட்கிறது

89

அதையும் இந்த யோக்கியர்களில் சிலர் செய்வதுண்டு. இவர்களுடைய தலை ஒன்று மொட்டையடிக்கப்பட்டிருக்கும். அல்லது ஜடாமுடி வளர்க்கப்பட்டு இருக்கும். மேனி முழுவதும் திருநீறு வரி வரியாக இழுக்கப்பட்டோ அல்லது பூசப்பட்டோ இருக்கும். கழுத்தில் ருத்திராட்ச மாலைகளோடு நவரத்தின கண்டி மாலையும் தகதகாய்க்கும். உடை காவியாய் இருந்தாலும் ‘சொரசொராக்’ காவியாயிருந்து உடம்பை உறுத்தாது; வழவழா பட்டாயிருந்து மேனியை ‘மழமழா’ என்று தொட்டுத் தழுவும். ஓட்டல் என்றால் ஐந்து நட்சத்திர ஓட்டல்தான் இவர்களுக்குப் பிடிக்கும். அறை என்றால் ஏர்கண்டிசன் செய்யப்பட்ட அறையைத் தவிர வேறு அறையை இவர்கள் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள். கீழே ஏறினால் சாதாரண காரில் ஏற மாட்டார்கள். ‘இம்பாலா’ காரில்தான் ஏறுவார்கள். மேலே பறந்தால் சாதாரண ஜெட் விமானத்தில் பறக்க மாட்டார்கள், ஜம்போ ஜெட்டில் தான் பறப்பார்கள்.

இதற்கெல்லாம் இவர்களுக்குப் பணம் எங்கிருந்து வருகிறது? யாருக்குத் தெரியும், அது சிதம்பர ரகசியம்!

ந்த மாதிரி ரகசியம் ஏதாவது உண்டா என் வாழ்வில்? கிடையவே கிடையாது. கொள்ளைக்குப் போனாலும் கூட்டு உதவாது என்று கொண்டிருந்த நீங்கள் இப்போது எடுத்ததற்கெல்லாம் ‘கூட்டுறவு கூட்டுறவு’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். இந்தக் கூட்டுறவு எனக்குப் பிடிக்காது. அதிலும் வேட்டைக்குப் போகும்போது

ஓ-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/90&oldid=1371023" இலிருந்து மீள்விக்கப்பட்டது