பக்கம்:ஓ மனிதா.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13. கிளி கேட்கிறது

‘அழகாயிருப்பது ஆபத்து’ என்று எந்தப் புண்ணியவான் எந்த ஆபத்துக்கு உள்ளாகிச் சொல்லி வைத்தானோ, அது என்னைப் பொறுத்தவரை நூற்றுக்கு நூறு உண்மையாயிருக்கிறது.

‘கன்னங் கரேலென்று இருக்கும் காகத்தைப் பிடித்து உங்களில் யாராவது கூண்டில் அடைக் கிறார்களா? அது ‘கா, கா’ என்று கரையும் ஒலியில் உங்களில் யாராவது மனத்தைப் பறிகொடுக்கிறார்களா?—இல்லை; பச்சைப் பசேரென்று இருக்கும் நான் மட்டும் தப்பித் தவறி உங்களிடம் அகப்பட்டுக் கொண்டுவிட்டால் போதும், உடனே பிடித்துக் கொண்டு போய்க் கூண்டில் அடைத்துவிட்டு என்னை நீங்கள் என்ன பாடுபடுத்துகிறீர்கள்! ‘ரங்க ரங்க ரங்கா! என்று நான் எழுப்பும் ஒலியில் உங்களுடைய இதயத்தைப் பறிகொடுத்துவிட்டு நீங்கள் என்னமாய் நிற்கிறீர்கள்!’

வேறு எந்த விஷயத்தில் எப்படியிருந்தாலும் என் விஷயத்தில் மட்டும் ராஜகுமாரியும் பிச்சைக்காரியும் ஒன்றே; கிளி ஜோசியக்காரனும் குருவிக்காரனும் ஒன்றே.

முன்னிருவர்களுக்கு நான் பொழுதுபோக்கு; பின்னிருவர்களுக்கு நான் பிழைப்பு!

‘அக்கா, அக்கா, அக்கா! விருந்தாளி, விருந்தாளி!’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/94&oldid=1371045" இருந்து மீள்விக்கப்பட்டது