பக்கம்:ஓ மனிதா.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

ஓ, மனிதா

நல்ல வேளை, இப்படிச் சொன்னதோடு அவர் நின்று விடவில்லை... ஆனாலும் அவன் செய்த குற்றம் குற்றமே; அதற்குரிய தண்டனையை இதோ வழங்குகிறேன்’ என்று அவனுக்குரிய தண்டனையையும் வழங்குகிறார்.

இன்னொரு கதை—என்ன கதையா?—இல்லை; உண்மை நிகழ்ச்சி சற்றுத் தூரத்தில் வரும்போதே அந்த அழகியை அவன் கண்கொட்டாமல் கவனித்துக் கொண்டே இருக்கிறான். அவள் அவனை நெருங்குகிறாள். கை பரபரக்கிறது. அவள் எதிர்பாராத விதமாக அவள் மேல் பாய்ந்து அவன் அவளைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துவிடுகிறான்.

அவ்வளவுதான்; அவள் ‘பெண் புலி’யாகிறாள்; தன் கையிலுள்ள புத்தகத்தால் அவனை ‘மொத்து! மொத்து’ என்று மொத்துகிறாள், அவனோ அவற்றை ‘வலிக்கு இதமளிக்கும் ஒத்தடமாக’ ஏற்று அவள் மொத்துவதற்கு ஏற்றாற்போல் தன் முதுகைத் திருப்பிக் காட்டுகிறான்.

அவளுக்குக் கை வலித்ததுதான் மிச்சம்; அவன் முதுகைத் திருப்பிக் காட்டுவதை நிறுத்தவேயில்லை!

விளைவு?

புலியின் சீற்றம் அடங்குகிறது; அதற்கும் பதிலாகச் சிரிப்பு பொங்கிக்கொண்டு வருகிறது. அதைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு அவள் சுற்று முற்றும் பார்க்கிறாள்; யாரையும் காணவில்லை.

அடுத்த கணம்...

அவளே அவனைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க ஆரம்பித்துவிடுகிறாள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/97&oldid=1371058" இருந்து மீள்விக்கப்பட்டது