பக்கம்:ஓ மனிதா.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிளி கேட்கிறது

97

தண்டனை ...

வேறு யாரும் வழங்க அவர்கள் விடவில்லை; அவர்களுக்கு அவர்களே வழங்கிக் கொண்டுவிடுகிறார்கள்.

என்ன தண்டனை?...

கலியாணம்!

அழகு மயக்கத்தில் இந்த ரசமான குற்றங்கள் மட்டுமா நடக்கின்றன? விரஸமான குற்றங்களும் நடக்கத்தான் நடக்கின்றன. அவற்றின் காரணமாக எத்தனை அடிபிடிச் சண்டைகள், கத்திக் குத்துகள், கொலைகள்!

அப்பப்பா! பயங்கரம், படுபயங்கரம்!

னாலும் மதுவைத் தடை செய்ய முடிவது போல் மங்கையையும் தடை செய்ய முடிகிறதா? இல்லை. அதுதான் போகட்டுமென்றால் அவள் அழகையும், அதற்காக அவள் செய்து கொள்ளும் அலங்காரத்தையும்— ஏன் அலங்கோலத்தையும் கூட உங்களால் தடை செய்ய முடிகிறதா?— எங்கே முடிகிறது?

சரி, பிரசாரம்?...

முன்னதற்கு வேண்டுமானால் நடக்கும்; பின்னதற்கு நடக்காது.

மாறாக, மங்கையின் அழகை அப்படியே பார்த்து ரஸித்தால் போதாதென்று ‘அழகிப் போட்டி’ என்று ஒன்றை நினைத்தபோதெல்லாம் நடத்தி வரிசையாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/98&oldid=1371062" இலிருந்து மீள்விக்கப்பட்டது