பக்கம்:ஓ மனிதா.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

ஓ, மனிதா!

வந்து நிற்கும் அவர்களுடைய மார்பகம் இத்தனை அங்குலம், இடை இத்தனை அங்குலம், தொடை இத்தனை அங்குலம் என்று ஒவ்வோர் உறுப்பின் அழகையும் அங்குலம் அங்குலமாகப் பார்த்து ரஸிக்கிறீர்கள்!

இம்மாதிரி சமயங்களில் அவர்கள் ஒரு சிறிதளவு துணியுடன் வந்து தங்கள் அழகைக் காட்டுவது பிடிக்காமல்தானோ என்னவோ ‘காபரே’ என்று ஒன்றை வேறு நீங்கள் கண்டுபிடித்திருக்கிறீர்கள். அந்த நடனத்தை ஓர் ஆரணங்கு அந்தத் துணியும் இல்லாமல் வந்து ஆடிக்காட்ட அதைப் பார்த்து நீங்கள் கை கொட்டி ரஸிக்கிறீர்கள்!

இன்று விளக்கை அணைத்துவிட்டுப் பார்க்கும் அந்த அழகுக் காட்சியை நாளைக்கு நீங்கள் விளக்கை அணைக்காமலே பார்க்கலாம்—ஏன் பார்க்க மாட்டீர்கள் முன்னெல்லாம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருந்த நாகரிகம் தான் இப்போது நிமிடத்துக்கு நிமிடம் வளர ஆரம்பித்துவிட்டதே!

இல்லாவிட்டால் இந்த அழகு மயக்கம், அழகுக் கவர்ச்சி, சினிமா உலகம், பத்திரிகை உலகம், விளம்பர உலகம் என்று ஓர் உலகத்தைக்கூட விடாமல் இப்படி எல்லாவற்றிலும் வியாபித்திருக்குமா?

அவற்றுக்கென்றே ‘போட்டோ’வுக்குப் ‘போஸ்’ கொடுக்க மேல் நாடுகளில் ‘மாடல் அழகிகள்’ உருவாகியிருப்பது போல இங்கேயும் உருவாகியிருப்பார்களா?

மாட்டார்கள்.

ஓ, மனிதா! காலையில் காஞ்சிக்குப் போய் ஆசார்ய சுவாமிகளைத் தரிசித்துவிட்டு வந்து, மாலையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/99&oldid=1371066" இலிருந்து மீள்விக்கப்பட்டது