பக்கம்:ஔவையார் கதை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

ஔவையார் கதை


தில்லை என்பதைத் தெளிவாகத் தெரிந்தாள். அன்றே ஆறுதலோடு உயிர்நீத்தாள். மனைவியை இழந்த யாளிதத்தனும் குழந்தையைத் தன் உறவினர் வீட்டில் வளர்க்கு மாறுகொடுத்துத் தான் வெளியூர் புறப்பட்டுவிட்டான்.

பாட்டு

பெற்றோரைப் பிரிந்திட்ட பிள்ளை
பேணிடும் உற்றோர்கள் இல்லில்
உற்றங்கு வளர்ந்தனள் நாளும்
ஒர்ந்தனள் பலகலைகள் மேலும்
கல்வியில் கலைவாணி யொத்தாள்
கற்றவர்கள் மெச்சிடப் பெற்றாள்
செல்வியாம் திருமகளை யொத்தாள்
சேயிழை பேரழகை யுற்றாள்
இசைவல்ல மெல்லியல் ஆனாள்
யாழிசையில் ஒப்பாரைக் கானாள்
நசையுள்ள நடனத்தில் வல்லாள்
நற்றமிழ்ப் புலமைகொள் நல்லாள்
நல்லிசைப் புலமைமெல் லியலாள்
நாடுறும் தமிழிசைக் குயிலாள்
வல்லவர் ஏத்துகவி சொல்வாள்
வையகம் வாழவழி விள்வாள்
முத்தமிழ்ப் புலமையும் மிக்காள்
மூதறி வாளர்புகழ் தக்காள்
வித்தகர் ஏத்திடும் அறிவாள்
விண்ணவர் போற்றுபணி புரிவாள்
கலையுரு வானகலை வாணி
கற்றவர்கள் அஞ்சுவார் நாணி
சிலைத்தங்க மானதிரு மேனி
சீர்ப்பருவ முற்றாளம் மானி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஔவையார்_கதை.pdf/10&oldid=507900" இலிருந்து மீள்விக்கப்பட்டது