பக்கம்:ஔவையார் கதை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

ஔவையார் கதை


படி பணிந்து வேண்டினான். அதியமானுடைய அன்பு நிறைந்த, பணிந்த மொழிகளால் ஒளவையார் சினந்தணிந்து அவனுடன் வந்தார். அவனது கொடை மன்றத்தை யடைந்தார். அவருக்கு அதியமான் பொன்னும் மணியும் பூம்பட்டாடைகளும் வேண்டுமட்டும் பரிசாக வழங்கினான்.

பாட்டு

ஒளவையே அறிவுச்செல்வி அடியேனைப்
பொறுத்தல் வேண்டும்
செவ்வையாய் நுந்தம் அன்பைச் சிறக்கவே
பெறுதல் வேண்டும்
தண்டமிழ்ச் சுவையைஉம்பால் கண்டிட
வேண்டும் என்றே
கொண்டவோர் எண்ணத்தாலே பரிசிலைக்
கொடுக்க வில்லே
பரிசிலைக் கொடுத்துவிட்டால் பதியினைப்
பெயர்ந்து செலவீர்
விரைவினில் உம்மைப்பிரிய விரும்பிலேன்
ஆகை யாலே
காலத்தைத் தாழ்த்திவிட்டேன் கடுஞ்சினம்
கொள்ளல் வேண்டாம்
ஞாலத்தில் கற்றேர்தம்மைப் பிரிந்திட
நயப்பார் யாரே?
கற்றார்கூட் டுறவெங்காளும் களிப்பினை
நல்கும் மேலும்
வற்றாத தமிழின்பத்தை வழங்கிட
வேண்டும் தாயே!
இங்ஙனம் சொல்லிநிற்கும் வள்ளலின்
இதயம் கண்டார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஔவையார்_கதை.pdf/14&oldid=507904" இலிருந்து மீள்விக்கப்பட்டது