பக்கம்:ஔவையார் கதை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஔவையார் கதை

15


பொங்கிடும் அன்புவெள்ளம் புரண்டலை
மோதக் கண்டார்
ஐயைய்யோ யாதுசெய்தேன் அதியமான்
அன்பைக் காணேன்
வையகம் போற்றும்வள்ளல் வண்மையைக்
கண்டே னில்லை
ஒருநாள் இருநாளல்ல பலநாள்
செலினும் அன்னான்
மருவிடும் சுற்றமோடு பெருகவே
செலினும் வள்ளல்
தலைநாளைப் போலஅன்பு தந்துமே
தாங்கிக் காப்பான்
பலநாள் கழிந்திட்டாலும் பரிசுவிரைந்
தளித்திட் டாலும்
யானையின்கைக் கவளம்போல என்றுமது
தப்பா தையோ!
கோனவனாம் தமிழகவள்ளல் அதியமான்
குணமீ தையோ!
என்றுபுகழ்ந் திணிதேஏத்தி நன்றவனை
வாழ்த்தி யிட்டார்
அன்றுமுதல் பன்னாளவ்வை அவன்சபை
அமர்ந் திருந்தார்

வசனம்

அதியமான் அரசவைப் பெரும்புலவராய் விளங்கி, அவ் வள்ளலுக்கு வாய்த்த வேளையெல்லாம் வளமான தமிழ்ச்சுவையை யூட்டினார். அவனைத் தமிழமுதப் பெருங்கடலில் திளைக்குமாறு செய்தார். ஒளவையார் ஊட்டி வரும் தமிழமுதத்தைப் பருகிய அதியமான் அவரைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஔவையார்_கதை.pdf/15&oldid=507905" இலிருந்து மீள்விக்கப்பட்டது