பக்கம்:ஔவையார் கதை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

ஔவையார் கதை


கண்ணினைக் காக்கின்ற இமையைப்போல் காத்துவந்தான். ஒருநாள் அதியமான், தனது மலைநாட்டைச் சார்ந்த தமிழ் மலையாகிய பொதியமலையின் அரிய வளங்களைக் காணூம் வேணவாவுடன் தனது பரிவாரம் சூழச்சென்றான். மலை வளம் கண்டு மகிழ்ந்துகொண்டு, உல்லாசமாக வரும் வேளையில் தவமுனிவர் ஒருவரைத் தரிசித்தான். அவருடைய பாதங்களில் விழுந்து வணங்கி எழுந்தான். அவனது சிறந்த குணத்தை யறிந்த அருந்தவ முனிவர் அவனுக்கு ஆசி கூறினார்.

பாட்டு

வானவர் வணங்கும் மலையதுதனிலே
வந்திட்ட செந்தமிழ் மன்னா!
தானவர் நடுங்கும் தலமிதுதனிலே
சார்ந்திட்ட வேந்தர் வேந்தே!
பிறையணி பெருமான் அருளது தன்னால்
பெருமலை யிதனில் வாழும்
நிறைமொழி முனிவன் தமிழ்வளர்இனியன்
அகத்தியன் நிலைத்து வாழும்
பொதியநன் மலையின் பொற்புயர் சிகரம்
பொருந்திய பிளவங் கொன்றில்
அதிமது ரந்தரு கருநெல்லிக்கனி
அருமரம் அங்கே உண்டு
அம்மர மதனில் பன்னிராண்டுக்
கொருமுறை அக்கனி தோன்றும்
செம்மைகொள் அக்கனி தின்றவர் பன்னாள்
செகத்தினில் நீடு வாழ்வார்
நறுஞ்சுவை அக்கனி முற்றிடும் நன்னாள்
நண்ணிய துடனே செல்வாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஔவையார்_கதை.pdf/16&oldid=507906" இலிருந்து மீள்விக்கப்பட்டது