பக்கம்:ஔவையார் கதை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஔவையார் கதை

17


அருங்கனி பெற்றினி துண்டுமகிழ்வாய்
அவனியில் நீடு வாழ்வாய்
இங்ங்னம் இயம்பி அம்முனி சென்றார்
இன்னருள் வள்ளல் விரைந்தான்
பொங்குயர் பொதிய மாமலைப் பிளவைப்
போய்க்கண்டு அரிதில் புக்கான்
வெடித்த பாறையுள் வீசியகிளைமேல்
மென்கனி தன்னைக் கண்டான்
துடித்திடும் உள்ளம் தூண்டிடஉச்சித்
தொங்கிடும் கனியைப் பறித்தான்
அமுதக் கனியதைப் பெற்ற அதியமான்
அரண்மனை விரைந்த டைந்தான்
தமிழ்முனி யளித்த தண்ணருள் அமுதம்
தானுண்டு வாழ விரும்பான்
பன்னாள் உலகினில் யானும் வாழ்ந்தால்
பயனே தும் விளைவ துண்டோ?
மன்னிடும் நூல்பல மக்களுக்கீயும்
மாதவளாம் ஒளவைக் கீவோம்
இவ்விதம் எண்ணி அரசவையிருந்தான்
இந்நேரம் ஒளவையும் வந்தார்.

வசனம்

அதியமான் தனது அரசவைக்கு வந்த அருந்தமிழ் மூதாட்டியாகிய ஒளவையாரை அகமகிழ்வுடன் எழுந்து சென்று வரவேற்றான். தனது அருகிலிட்ட தனி மணி பாசனத்தில் அமரச் செய்தான். கையில் வைத்திருந்த கருநெல்லிக்கனியைக் கன்னித்தமிழ் அன்னையாகிய ஒளவையாரிடம் அளித்தான். “தாயே! இதனை உண்ணாக!” என்று அன்போடு கூறினான். ஏதோ ஓர் சாதாரண நெல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஔவையார்_கதை.pdf/17&oldid=507907" இலிருந்து மீள்விக்கப்பட்டது