பக்கம்:ஔவையார் கதை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஔவையார் கதை

19


தாரணிந்த போர்மன்னா! தமிழ்வள்ளல் அதியமானே!
ஆறணிந்த பேரீசன் அருள்நீல மணிகண்டன்
போலவே மன்னிடுக ! பூமிதனில் புகழ்பெறுக!
காலமெலாம் இன்புற்றுக் காசினியில் வாழ்ந்திடுக!
என்றேத்தி யிருந்திட்டார் இனியதமிழ்ச் செல்வியவர்!
அன்றுமுதல் அவர்வ்நட்பு அரியசுவை நூலாச்சு
அதியமான் வீரமதும் அருள்வண்மைச் சீலமதும்
மதிவன்மை யால்பாடி மாநிலத்தை மகிழ்செய்தார்.

வசனம்

ஒளவையார் அதியமான் அரண்மனையிலேயே தங்கி, அவனுக்குத் தமிழமுதத்தைப் பலகால் ஊட்டி அவன். அரசவையை அலங்கரித்து வந்தார். அவனது சபைப் புலவராக விளங்கியதோடல்லாமல் தக்க சமயங்களில் நல் வழி காட்டும் மதிமந்திரியாகவும் இம் மாதரசி விளங்கி வந்தார். ஒளவையாரின் அரசியலறிவுப் பெருந்திறனைக் கண்ட அதியமான், தன்னே எளியவகை எண்ணித் தன்னோடு போர்கொடுத்தற்குச் சமயம் நோக்கியிருக்கும் காஞ்சித் தொண்டைமானிடத்துத் துாதுசென்று வருமாறு அன்புடன் வேண்டினான். அதியமான் பொருட்டுத் தொண்டைமானிடம் தூதுசெல்ல இசைந்தார்.

பிறநாட்டு மன்னர் பேரவைக்குத் தூதுவாய்ச் சென்று தொழிலாற்றப் பெண் ஒருத்தி பெருமையுடன் சென்றாள் என்ற சிறப்பை முதலில் பெற்ற நாடு, நம் பெருந்தமிழ்நாடே. ஒரு நாட்டு அரசியல் தூதுவர், பிற நாடுகளில் பணி செய்வதை இன்றும் நாம் காண்கின்றோம். என்றாலும் இன்று தூதுவர்களைப் பகைவர் நாட்டுக்கு அனுப்புவதில்லை. உறவுடைய நாடுகட்குமட்டுமே அனுப்புவார்கள். அந் நாடுகளோடு நட்புறவு நீங்கிப் பகைதோன்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஔவையார்_கதை.pdf/19&oldid=507909" இலிருந்து மீள்விக்கப்பட்டது