பக்கம்:ஔவையார் கதை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

ஔவையார் கதை


ராகிய காளமேகப்புலவர் இத்தகைய நிந்தாஸ்துகி பாடுவதில் இணையற்ற புலவர். ஆறுமுகப் பெருமானுடைய அருமையைக் கூறவந்த அந்தப் புலவர்,

பாட்டு

அப்பன் இரந்துண்ணி ஆத்தாள் மலைநீலி
ஒப்பரிய மாமன் உறிதிருடி-சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன் ஆறுமுகத் தானுக்கிங்(கு)
எண்ணும் பெருமை யிவை

வசனம்

என்று வஞ்சப்புகழ்ச்சியாகப் பாடினார். இது போன்ற வாக்குவன்மையால் அதியமான் ஆற்றலை இகழ்வதுபோலப் புகழ்ந்து, தொண்டைமான் செருக்கை அடக்கினார். அந்தக் காலத்தில் திருக்கோவலூரை ஆண்ட மலையமான் திருமுடிக்காரி என்னும் மன்னன், அரசர் பலரை வென்று, செருக்குக் கொண்டிருந்தான். இதனை அறிந்தான் அதியமான்.

பாட்டு

திருக்கோவ லூரை யாண்ட
திருமுடிக் காரி யென்பான்
செருக்கினை யடக்க வேண்டிச்
சேருங்கள் படையை என்றான்
நால்வகைப் படைகளோடும்
நன்கவனைத் தாக்க லுற்றான்
மேலான அறிவுச் செல்வி
மேன்மைகொள் ஒளவை கண்டார்
போரிலே எண்ணில் உயிர்கள்
போதலைக் கண்டு நைந்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஔவையார்_கதை.pdf/22&oldid=507912" இலிருந்து மீள்விக்கப்பட்டது