பக்கம்:ஔவையார் கதை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

ஔவையார் கதை


பாணர்தம் பாத்திரம் துளைத்து
பைந்தமிழ்ப் புலவர்நாத் துளைத்து
பேணிடும் உறவோர்கண் துளைத்து
பெரும்பசி யாளர்கைத் துளைத்து
மறைந்ததே அவ்வேலும் ஐயா !
மாநிலம் பாடுநரும் இல்லை
நிறைந்தவர்க் கீகுநரும் இல்லை
நீணிலத் துயிர்கள்மிக வாடும்.

வசனம்

இங்ஙனம் அதியமான் போரில் இறந்தது கண்டு ஆறாத தூயமடைந்த ஒளவையார், பலவாறு புலம்பிக் கலங்கி அவனது கொடைத்திறத்தைக் கொண்டாடிப் பாடினார். அதியமான் இறந்த பின்னர் அவன் மகன் பொகுட்டெழினி என்பான் முடிசூடினான்.

பாட்டு

அதியமான் பெற்றெடுத்த அருந்தவப் புதல்வனவன்
மதிமிக்க பொகுட்டெழினி மணிமுடி தரித்திட்டான்
ஆண்டினில் மிகவிளைஞன் அறிவில் மிகுவினைஞன்
மாண்டதன் தந்தையைப்போல் வள்ளன்மை உள்ளத்தான்
அன்னவற்கு அரசியலில் அருந்துணையாய் ஒளவைநின்றார்
மன்னவனை வாயாரப் புகழ்ந்து பல பாப்புனைந்தார்
சில்லாண்டு கழிய அவர் செந்தமிழ் நாடுசுற்ற
நல்லார்வ மிகக்கொண்டு நயந்துவிடை தான்பெற்றார்
தன்னுடைய மலைநாட்டுத் தமிழ்வள்ளல் வள்ளுவனை
மன்னுபுகழ் நாஞ்சில்மலை மன்னவனை நண்ணியிட்டார்
வள்ளுவனே! சிறிதரிசி வழங்குக! நீ என்றிட்டார்
உள்ளமகிழ் வள்ளுவனோ ஓரானை உவந்தளித்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஔவையார்_கதை.pdf/26&oldid=507916" இலிருந்து மீள்விக்கப்பட்டது