பக்கம்:ஔவையார் கதை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஔவையார் கதை

7


ஒளவையின் பெற்றோரைப் பற்றி
அறிதற்கு வழியில்லே சுற்றி
ஆராய்வோம் நாமதைப் பற்றி
செவ்வையாய் நோக்குவார் தெரிவார்
செந்தமிழ்ப் பலநூல்கள் அறிவார்
தேர்ந்துவரலாற்றினைப் புரிவார்

வசனம்

நம் தமிழ் மூதாட்டியாராகிய ஒளவையார் அவதரித்த நாடு சேரநாடாகும். இப்போது மலையாள நாடென்று சொல்லப்படும் நாடே பழைய சேரநாடு. இதை மலைநாடு என்றே ஒளவையார் குறிப்பிடுவார். தமிழ்நாட்டின் பல பகுதிகளுடைய சிறப்புக்களையும் ஒரே பாட்டில் உணர்த்த விரும்பிய ஒளவையார், "வேழம் உடைத்து மலைநாடு" என்று தொடங்கினார். முதலில், தாம் பிறந்த நாட்டின் பெருமையையே காட்டினார். அவருடைய நாட்டுப்பற்றைப் பாருங்கள்!

பாட்டு

சேரன் ஆண்ட செல்வநாடு
செங்குட் டுவனன்(று) ஆண்டநாடு
வீரர் பல்லோர் வாழ்ந்தநாடு
வேந்தர் புகழைக் காத்தநாடு
மலைகள் சூழ ஆளும்நாடு
மாதவர் எங்கும் தங்கும்காடு
கலைகள் எல்லாம் ஓங்கும்நாடு
கற்றவர் பல்லோர் தாங்கும்நாடு
ஆறுகள் பாய்ந்து பரவும்நாடு
யானைகள் மேய்ந்தங் குலவும்நாடு
தேறிடும் தீந்தமிழ் ஆய்ந்தகாடு
தேர்தமிழ் வாணர் வாழ்ந்தநாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஔவையார்_கதை.pdf/7&oldid=507897" இலிருந்து மீள்விக்கப்பட்டது