பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

ஔவையார் தனிப்பாடல்கள்



மனையாளை மணம் கமழும் பஞ்சணையில், அவளுடன் கலந்து உறவாடி இருக்கும்போதுதான், போற்றுதல் வேண்டும்.

பிள்ளைகளை உள்ளத்துள் பாராட்டிக் கொள்ளலாம், நேரில் பாராட்டுவது கூடாது. அதனால், அவர்களுடைய ஊக்கம் கெட்டுவிடும்.

வேலைக்காரர்களை வேலை முடிந்த பின்பே பாராட்டுதல் வேண்டும். வேலை நடுவில் பாராட்டினால், எஞ்சியுள்ள வேலை சரிவர நடைபெறாமற் போய்விடும். இல்லையானால் அதிகமான கூலியிலே மனம் செல்ல, அதற்காக அவர்கள் வம்பு செய்தலும் கூடும்.

நேசனைக்கா ணாவிடத்தில் நெஞ்சார வேதுதித்தல்
ஆசானை எவ்விடத்தும் அப்படியே - வாச
மனையாளைப் பஞ்சணையில் மைந்தர்தமை
நெஞ்சில் வினையாளை வேலைமுடி வில்.

“நண்பனை அவனைக் காணாத இடத்திலும், ஆசிரியனை எல்லா இடங்களிலும், மனங்கொண்ட மனையாளைப் பஞ்சணையிலும், பிள்ளைகளைத் தம் உள்ளத்திலும், வேலை யாட்களை வேலையின் முடிவிலுமே மனமாரப் போற்றுதல் வேண்டும் பிற சமயங்களில் போற்றுவது சிறப்பன்று" என்பது பொருள்.

68. யாரால் கெடுவது?

பெண்கள் கற்புநெறியுடன் வாழ்தல் வேண்டும். அவர்கள் அதனாற் சிறப்பு அடைவார்கள். அவர்களை மணந்த கணவருக்கும், அவர்கள் விளங்கும் குடும்பத்திற்கும், அதனால் பெரிதும் நன்மை உண்டாகும். இப்படிச் சொல்லுகிறார்கள் பெரியவர்கள்.

பெண்கள் மெல்லியல்பு பெற்றவர்கள். அவர்கள் கற்பு நெறியைப் பேணுவது என்பது, ஆண்களின் ஒழுக்கமும் ஒத்துழைப்புமின்றி இயலாது. பெண்களுக்குக் கற்பு நெறியை விதித்துவிட்டு, ஆண்கள் தடம் புரண்டு போய்விடும் நிலைமை மிகவும் மோசமானது. இதனைத் தமிழறிஞரான ஒளவையார் நினைவிற் கொண்டார்.

'பெண்கள் எல்லாரும் நல்ல பண்பு உடையவர்கள்தாம். வலிமையுடைய ஆண்கள்தாம் அவர்கட்குக் கேடு செய்கின்றனர். கேட்டையும் செய்துவிட்டுக் கெட்ட பெயரையும் தந்துவிட்டுத் தாங்கள் உத்தமர்போல உலவுகின்றனர். வன்மையாளரான ஆண்களால் இயல்பாகக் கெடுக்கப் படாதவரானால்தான்