பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

ஔவையார் தனிப்பாடல்கள்



எழுபிறவி முற்பட்டு எழுந்தவான பிறவிகள் வருபிறவி வருகின்ற பிற்பட்ட பல பிறவிகள். இருள் - அஞ்ஞான மயக்கம். மலைவு - மயக்கம். மதித்தல் - போற்றுதல்,

இதனால், தாம் பிறவியிலேயே தமிழ் அறிவு வாய்க்கப் பெற்றவர் என்னும் கருத்தினைத் தெளிவுபட எடுத்துரைத்தனர் ஒளவையார். தாம் மலைவாகக் கொள்ளாமை கூறினார், தம் கருத்தே முறையானது என்று வலியுறுத்துவதற்கு

மலைவு - மயக்கம்.

79. கல்வியின் பயன்!

'ற்க கசடறக் கற்பவை கற்றபின், நிற்க அதற்குத் தக' என்று குறளாசிரியர் கூறுவர். கசடறக் கற்காத கல்வி பயனற்றது. கசடறக் கற்றும் அதற்கிசைய நிற்காதவனின் கல்வியும் பயனற்றது. கல்வியின் இந்த நிலையினை மேலும் நன்கு தெளிவு படுத்துகின்றார் ஒளவையார்.

‘ஒரு நூலினை ஏட்டிலே பெயர்த்து எழுதுதல் என்பது அரிதான செயலாகும். அந்த அரிய செயலைச் செய்தாலும் அப்படி எழுதியுள்ளதனைக் குற்றமின்றிப் படிப்பது அதனினும் அரிதான ஒரு செயலாகும்.

பழுதற வாசிக்கும் தன்மையைப் பெற்றுவிட்டாலும், பண்புடன் முற்றவும் அந்த நூலைக் கற்பது அரிதான செயலாகும். அதற்கேற்ற நேரமும் வசதிகளும் பலருக்கும் எளிதில் வாய்ப்பதில்லை.

கற்றாலும், பிறவியின் தன்மையினை உள்ளபடியே உணர்ந்து வாழ்விற்கான நற்பயனைக் கண்டுணர்வது மிகவும் அரிதான செயலாகும்.

அங்ஙனம் கற்றதன் பயனாக நற்பயனைக் காணுகின்ற தெளிவினைப் பெற்றவர்களே மிகச் சிறந்தவர்கள். அவர்கள் நிலையில் தளராது நிலைபெறும் உறுதித் தன்மையினையும் பெறுதல் வேண்டும். இங்ங்னம் நிலையினிற் பிறழாது அவர் உறுதியாக நிற்பாரானால், அதுவே கல்வியின் பயனை அடைந்ததாகும்.'

எழுதரிது முன்னம் எழுதிய பின்னர்
பழுதறவா சிப்பரிது பண்பாய் - முழுதுமதைக்
கற்பரிது நற்பயனைக் காண்பரிது கண்டக்கால்
நிற்பரிது தானந் நிலை.