பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

ஔவையார் தனிப்பாடல்கள்



99. இபக் கோடு!

ளைஞன் ஒருவன் தன்னை ஆட்கொண்ட தன் காதலியுடன் களவு உறவிலே சந்தித்துக் களித்து வருகின்றான். ஒருநாள், அவளுக்காகக் குறித்த இடம் நோக்கி வந்து கொண்டிருந்தான். இடை வழியில், ஓரிடத்தில், ஒருவன் காளை மாட்டுக் கொம்புகளைச் சீவிச் செதுக்கிப் பலபொருள்களைச் செய்து கொண்டிருந்தான்.

அந்தக் கொம்புகள் அவன் நினைவை அவள் தனபாரங்களிற் கொண்டு செலுத்தின. ஒரு சமயம், அவள் தனபாரங்களை, 'இபக்கோடுகள்' எனத் தான் வருணித்ததை நினைத்துச் சிரித்து கொண்டான். அவை அவள் தனபாரங்களின் அழகுக்குத் தோற்றுத்தான் இப்படி அழிகின்றன என்றும் கருதினான். அவன் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.

ஆய்ப்பாடி யாயர்தம் ஐவே லசதி யணிவரையில்
கோப்பா மிவளெழிற் கொங்கைக்குத் தோற்றிபக்
கோடிரண்டும்
சீப்பாய்ச் சிணுக்கரி யாய்ச் சிமிழாய்ச் சின்ன
மோதிரமாய்க்
காப்பாய்ச் சதுரங்க மாய்ப்பல்லக் காகிக்
கடைப்பட்டவே.

"ஆயர்பாடிகளுள் வாழ்கின்ற ஆயர் குலத்தவரின் தலைவர் ஐவேலசதி. அவனுடைய அழகான மலைச்சாரலில், கட்டுக்கோப்பாக அமைந்தவை இவளுடைய கொங்கைகள் இரண்டும்.

இவளுடைய கோப்பான கொங்கைகட்குக் காளைக் கொம்புகள் இரண்டும் சமமாக நிலைபெற மாட்டாது தோற்றன. சீப்பாகவும், சிணுக்கரியாகவும், சிமிழாகவும், சின்ன மோதிரமாகவும், காப்பாகவும், சதுரங்கக் காய்களாகவும் பற்பல துண்டுகளாகி, அதனால் தாம் இழிநிலை பெற்றும் போயின." என்பது பொருள்.

கோப்பு - செம்மையுற அமைந்த நிலை. இபம் இடபம்; காளைமாடு; யானையும் ஆம் பல் + அக்கு + ஆகி - பல்லக்காகி.

100. அவளாகத் தோன்றும்!

ரு காதலன், மலைச்சாரலிடத்தே ஒரு கன்னிகையைக் கண்டான். அவள்மீது இவன் கொண்ட ஆசை அளவு கடந்த தாயிற்று. அவன், ஒரு சமயம் அந்த ஆசைப் பெருக்கினைத் தன்னைக் கடிந்து விலக்க முயன்ற தன் தோழனிடம் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.