பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

127


பேரன்பு உடையவனாகத் திகழ்ந்தவன் பந்தன்.

ஒளவையாரைக் கண்டதும், 'நீவிர் யாவிரோ? யாது காரியமோ?’ என்றான் பந்தன். 'யான் அவ்வை; பொன்னை நாடி நின்னிடம் இரப்பதற்கு வந்தேன்’ என்றார் ஒளவையார். அதைக் கேட்டு வருந்தினான் பந்தன், பொன்னை அவர் வேண்டியபடி கொடுத்து உவக்கச் செய்து இன்புற்றான்.

அதனாற் களிப்புற்ற ஒளவையார், பந்தனைத் தலைவனாகக் கொண்டு 'பந்தன் அந்தாதி' என்றோர் இனிய நூலினை இயற்றினார். அது காலத்தால் மறைந்து போயிற்றாயினும், அவர் பாடிய இந்தப் பாடல் பந்தனின் தகுதியை நமக்குக் காட்டுகின்றது.

யானவ்வை யென்றிரந் தேத்தினேன்; மற்றவனும்
ஏனவ்வே யேனென் றிரங்கினான் - நானும்கேள்
மன்னும் புகார்வணிகன் மாநாய்கன் பந்தனெனும்
பொன்னினருள் பெற்றேனிப் போது.

“யான் ஒளவை என்று சொல்லி இரத்து நின்றவளாக அவனைப் போற்றிப் பாடினேன். அவனும், 'ஏன் அவ்வே?' எனக் கேட்டவனாக, எனக்கு இரக்கங் கொண்டான் வளம் செறிந்த புகார் வணிகனான மாநாய்கன் பந்தன் என்பவனால் நானும் இப்போது பொன்னின் அருள் பெற்றவளானேன். இதனைக் கேட்பாயாக" என்பது பொருள்.

103. பொய்ம் மகள்!

பொய் சொல்லாத ஒரு வாய்மை நிலை உலகத்தில் என்றுமே இருந்ததில்லை. எனினும் பொய்யைக் கலையாகப்பேணி அதற்கு உண்மை வேடத்தையும் நன்றாகப் புனைந்து உலகினை ஏய்க்கின்றவர்களும் பலர் உள்ளனர். இவர்களின் பொய்ம்மைத் திருவிளையாடல்கள் ஒளவையாரின் உள்ளத்தை வாட்டவே, அவர் பாடிய செய்யுள் இது.

ஆயத் துறைப்பிறந்து அந்தணர் பால்குடித்து ஐயிருநாள்
மாயக்கண் வேசை யிடத்தே வளர்ந்துவண்
ணானொருநாள்
ஏய புலவரிடத் தெட்டுநாள் செட்டி ஏன் என்றபின்
போயக்க சாலை புகுந்தனள் காண்அந்தப் பொய்ம்மகளே.

“பொய்ம் மகள் ஆயத்துறையிலே பிறந்தாள். அந்தணரின் பால் குடித்து வளர்ந்தாள். பத்துநாள் மாயஞ்செய்யும் கண்களையுடைய வேசையிடத்தே சென்றிருந்து மேலும் வளர்ந்தாள். வண்ணானிடம் ஒருநாள் தங்கினாள். புலவர்களிடத்தே எட்டு நாட்கள் சென்றிருந்தாள். செட்டிகளிடம் அவர்கள் இனி நமக்கு