பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

27



"தொண்டரின் செருப்புச் சுவட்டைப் போற்றினாலாவது செய்த பாவம் போகும். நல்ல கதியைப் பெறலாம். நின் செல்வம் அத்தகைய பயனைத் தருவதோ?

பயன் தருவதாயின், நின் இல்வாழ்விற்கு ஏற்ற துணை இருக்க வேண்டும். அஃதில்லாதபோது பொருளால் வருகிற பயனை நீயும் அடைய முடியுமோ?

பொருட்பற்று உடைய நின்னால் சந்நியாசத்தில் உறுதியுடன் இருப்பதும் இயலாத்தாகும். அதனால், நிலையற்ற உள்ளமுடைய நின்போல்வார் நெருப்பில்..விழுந்துசெத்துப்போத்ல்ே நன்று.”

இவ்வாறு கடுமையாக உரைத்தனர். ஒளவையார் இல்லற நெறிநிற்பவர்கள் இணைந்த மனங்கலந்த உறவினைப் பேணுதல் வேண்டும். அஃதன்றி இருவர்க்கிடையே முரண்பாடு நிலவுமானால், அது வாழ்வே ஆகாது. இந்த ஆண்மையைத் தெளிவுபடுத்துவன இந்தச் சில செய்யுட்கள் ஆகும்.

இச்செய்யுளின் இறுதியடி, நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர் எனவும் வழங்கும். அந்தச் செல்வத்தை நெருப்பில் விட்டுப் பொசுக்குக என்பது கருத்து.

17. சிலம்பியின் சிலம்பு.

ருநாள் ஒளவையார் தெருவூடே போய்க் கொண்டிருந்தார். ஒரு வீட்டுச் சுவரில் ஒரு வெண்பாவின் முதல் ஏழு சீர்கள் மட்டுமே எழுதியிருப்பதைக் கண்டார். சொற்களின் இனிமை அவரைக் கவர்ந்தது. எஞ்சிய பகுதியையும் அறிந்து கொள்ள விரும்பினார். அந்த வீட்டினுள்ளே சென்றார்.

அங்கே ஓர் இளம்பெண் சோர்வுடன் இருக்கக் கண்டார். ஒளவையாரின் உள்ளம் அவளைக் கண்டு இரக்கம் கொண்டது. "மகளே, நின் வீட்டுச் சுவரிலே பாதிப்பாடல் எழுதியிருப்பதைக் கண்டேன். பாடலின் சொற்சுவை எஞ்சிய பகுதியையும் அறிந்து கொள்ளத் தூண்டியது. அதனால், உள்ளே வந்தேன்” என்றார் அவர்.

அந்தப் பெண் ஏதும் பதில் சொல்லவில்லை. அவள் கண்கள் நீரைச் சொரிந்தன. நீண்ட பெருமூச்சு அவளிடமிருந்து எழுந்தது. அதனைத் தொடர்ந்து அவளுடைய வேதனையின் காரணமாக அழுகுரலும் தோன்றியது.

ஒளவையார் திடுக்கிட்டார். அப்பெண்ணின் உள்ளத்திற்கு வேதனையூட்டும் ஒரு சம்பவம் அந்தப் பாதிப்பாடலுடன் புதைந்து கிடப்பது அவருக்குப் புரிந்துவிட்டது. “அழாதே அம்மா! நின்