பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

ஔவையார் தனிப்பாடல்கள்


நாட்டவரான அவர்கட்குச் சீர் வழங்கும் பொறுப்பும் பாண்டியனுக்கே உளதாகும். இதனை மனத்துட்கொண்டே அவனுக்கு ஒளவையார் 'வேண்டுவன கொண்டு வருக'. எனவே எழுதினார் போலும்!

‘விடியல் பதினெட்டாம் நாள்' எனவும், 'வருக விசைந்து' எனவும் பாடபேதங்கள் காட்டுவர், இறுதி அடிகளில்,

25. பொன்மாரி பெய்க!

திருமண ஏற்பாடுகளில் ஒளவையார் மிகவும் ஈடுபட்டனர். மூவேந்தர்களுக்கும் அழைப்பு விடுத்த பின்னர், தம்முடைய பிற வேலைகளையும் கவனிக்கலாயினர்.

'பாரி மகளிர்' என்ற பெருமை அந்தப் பெண்களுக்கு இருந்தது. ஆனால், பாரி மடிந்துவிட்டான். பாரிக்குப் பின்னர் அவர்களைப் பேணும் கடமையினைக் கபிலர் ஏற்றனர். அவரும் அவர்களைப் பார்ப்பார்கள்பால் ஒப்பித்து, வடக்கிருந்து உயிர் நீத்தனர். அவர்கள் நலனைக் கவனிக்க ஒளவையாரையன்றி வேறு யாரும் அப்போதைக்கு இல்லை.

அவர்களைக் காப்பது மட்டுமன்றித் திருமணமும் செய்வித்துக் களிக்க எண்ணினார் ஒளவையார். அவருடைய நல்ல உள்ளம் அந்தப் பொறுப்பை மேற்கொண்டதும், தெய்வமும் துணைக்கு வந்தது. விநாயகப்பெருமான் திருமண நாளோலை எழுத, எல்லாம் சிறப்பாக நடந்து வந்தன.

சேர, சோழ, பாண்டியரை அழைத்த ஒளவையாருக்கு, அவர்களைத் தக்கபடி வரவேற்று உபசரிக்கும் பொறுப்பும் இருந்தது. அவர்களுடன் வரும் பெரும்படைகளையும் பிற அரசச் சுற்றங்களையும் உண்பித்து வழியனுப்புவது என்பது எளிதன்று. அதனால், அவர் அதற்கும் தெய்வத் துணையினையே நாடினார்.

மழைக்கு இறைவன் வருணன். அவனை அழைத்தார் ஒளவையார். 'வருணனே! இந்தப் பெண்கள் திருமணத்தை நடத்துவதற்கு ஏராளமான பொன் வேண்டும். நின் மழையைச் சற்று மாற்றிப் பொன் மழையாகப் பொழிந்து உதவுக' என்றனர்.

கருணையால் இந்தக் கடலுலகம் காக்கும்
வருணனே மாமலையன் கோவற் - பெருமணத்து
முன்மாரி பெய்யும் முதுவாரியை மாற்றிப்
பொன்மாரி யாகப் பொழி.

“உலகத்து உயிர்கள் உண்டு உயிர் வாழ வேண்டும் என்ற கருணையினால் நீர்வளம் பெருக்கிக் கடல் சூழ்ந்த உலகினைக்