பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

43


இருக்க வேண்டும் என்பதனைக் கொடுப்பவர்கள்தாம் அறிந்து செய்வார்கள்” என்பது பொருள்.

கொடையாளர் தம் தகுதியைத்தான் கருதி வழங்குபவர்களாக இருப்பார்கள். வந்து இரப்பவர்களின் தகுதியை ஆராய்வதும், அதற்கேற்ப வழங்குவதும் அவர்களின் இயல்பாக இருப்பதில்லை. இந்த அரிய உண்மைக்கு இலக்கணமாக விளங்கினான் சேரமான்.

இந் நாளினும் மணவீடுகளிற் சிலர் தம் பெண்ணுக்குப் பாற்பசு ஒன்று வழங்குகின்றனர். இது இவ்வாறு தொன்று தொட்டே வழங்கிவரும் பழக்கத்தால் வந்தது போலும்!

30. இன்றுபோல் என்றும் இரும்!

திருமண வீடுகளிலே மணமக்களை வாழ்த்துபவர்கள், 'இன்றுபோல் என்றும் இருப்பீர்களாக' என்று கூறுவார்கள்.புதிய மணமக்களிடையே அளவற்ற ஆர்வமும், ஈடுபாடும் நிலவும்.அவை காலம் கழிய, உருவத்திலே முதுமை படியப்படியக் குறைந்து போவதும் ஏற்படலாம். அங்ஙனம் குறைதல் ஆகாது. உருவ எழிலால் மாறுபட்டாலும் உள்ளத்தால் என்றும் ஒருவரேயாக அவர்கள் வாழ்தல் வேண்டும். அதுதான் தலைசிறந்த இல்லற வாழ்வாகும்.

அங்ஙனம் வாழுமாறு, பாரியின் பெண்களை மணந்து கொண்ட இளைஞர்களை ஒளவையார் வாழ்த்துகின்றார். மணப்பெண்களை வாழ்த்தாமல், மணப் பிள்ளைகளைத்தான் வாழ்த்துகின்றார். இதிலும் நியாயம் இருக்கிறது.

தன்னை நேசித்து மணந்துகொண்ட மணாளனிடம் பெண் கொள்ளுகின்ற காதல் என்றும் நிலையானது. அதன் உறுதியை முதுமையும் பிற ஏதும் தளரச் செய்துவிட இயலாது. ஆனால் ஆணின் நிலைமை வேறு. அவன் அழகுக் கவர்ச்சியை நாடிப் பிற மாதரையோ அல்லது பரத்தையரையோ தேடுதல் கூடும். இதுபற்றியே ஒளவையார் உலகியலை நன்றாக அறிந்தவராதலினால், அந்த மணப் பிள்ளைகளை வாழ்த்தி, அறிவுரையும் கூறுகின்றார்.

ஆயன் பதியில் அரன்பதிவந் துற்றளகம்
மாயனு துங்கருவி யானாலும் - தூயமணிக்
குன்றுபோல் வீறு குவிமுலையார் தம்முடனிர் இன்றுபோல் என்றும் இரும்.

“அரச குமாரர்களே! உங்கள் மனைவியாரின், திருமால் தங்குமிடமான ஆலிலை போன்ற வயிற்றில், அரன் வாழிடமான